பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்த தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி..! | madurai high court allows private school teachers to correct the papers

வெளியிடப்பட்ட நேரம்: 07:05 (26/04/2018)

கடைசி தொடர்பு:07:23 (26/04/2018)

பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்த தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி..!

தேனி மாவட்ட தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத் தலைவர் என்.சிவகுமார், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்தார்

'பொதுத்தேர்வு விடைத்தாள்களைத் திருத்த தனியார் பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்துவது தவறல்ல' என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை  உத்தரவிட்டது. 

பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணியில் தனியார் பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்துவது தொடர்பான அரசு தேர்வுத்துறை இயக்குநர் 18.4.2018-ல் பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்து, அரசுப் பள்ளி ஆசிரியர்களை மட்டும் ஈடுபடுத்த உத்தரவிட வேண்டும் என கோரிய வழக்கைத் தள்ளுபடிசெய்து, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

தேனி மாவட்ட தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத் தலைவர் என்.சிவகுமார், உயர் நீதிமன்றக் கிளையில்  மனு ஒன்றைத் தாக்கல்செய்தார். அதில், 'பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணியில் தனியார் பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்துவது தொடர்பாக அரசு தேர்வுத்துறை இயக்குநர் 18.4.2018-ல் பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்து, பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் அரசுப் பள்ளி ஆசிரியர்களை மட்டும் ஈடுபடுத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கேட்டுக்கொண்டார். இந்நிலையில், 'இந்த மனு, நீதிபதிகள் சி.டி.செல்வம், பஷீர்அகமது அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப்பின், விடைத்தாள்கள் திருத்தும் பணிக்கு போதிய எண்ணிக்கையில் அரசு ஆசிரியர்கள் இல்லாத நிலையில், தனியார் பள்ளி ஆசிரியர்களைப் பணியில் ஈடுபடுத்துவது தவறல்ல என்று உத்தரவிட்டு மனுவைத் தள்ளுபடிசெய்தார்.


[X] Close

[X] Close