வெளியிடப்பட்ட நேரம்: 08:40 (26/04/2018)

கடைசி தொடர்பு:08:40 (26/04/2018)

மூலவர் சிலை கடத்தல் விவகாரம்! ஸ்தபதி முத்தையாவுக்கு ஜாமீன் கிடைக்குமா?

பழனி தண்டாயுதபாணி கோயிலில் மூலவர் சிலை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஸ்தபதி முத்தையா, இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் ராஜா ஆகியோர் ஜாமீன் கோரிய வழக்கில் அரசு தரப்பில் காலஅவகாசம் கோரியதால் விசாரணை ஒத்திவைத்த உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை.

பழநி தண்டாயுதபாணி கோயில் மூலவர்  சிலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட ஸ்தபதி முத்தையா, இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் ராஜா ஆகியோர் ஜாமீன் கோரிய வழக்கில், அரசு தரப்பில் காலஅவகாசம் கோரியதால், விசாரணை ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை.

பழநி தண்டாயுதபாணி கோயிலில் மூலவர்  சிலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட சென்னையைச் சேர்ந்த ஸ்தபதி முத்தையா மற்றும்  இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் ராஜா ஆகியோர் ஜாமீன் கேட்டு கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்றங்களில்  தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடிசெய்யப்பட்டன. இதையடுத்து, இரண்டு பேரும் ஜாமீன் வழங்கக் கோரி, தற்போது உய ர்நீதிமன்றம் மதுரைகிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

ஸ்தபதி முத்தையா சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில்,  திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி  கோயில் மூலவர் சிலை விவகாரம் தொடர்பாக, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையால் கைதுசெய்யப்பட்டு, கடந்த மாதம் மார்ச் 26-ம் தேதி சிறையில் அடைக்கப்பட்டிருந்தேன். இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணாமாக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தேன். உடல் நிலையைக் கருதி, தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல, இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் ராஜாவும் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனுக்கள், நேற்று நீதிபதி சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் கால அவகாசம் கோரியதால், வழக்கு விசாரணையை ஏப்ரல் 26-ம் தேதிக்கு (இன்று) ஒத்திவைத்தார்.