அ.ம.மு.க கூட்டத்துக்கு அனுமதி கேட்ட வழக்கில் புதுக்கோட்டை எஸ்.பி-க்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

புதுக்கோட்டையில் டி.டி.வி., தினகரன் அணியினரின் தொழிலாளர் தின பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கோரிய வழக்கில் மனுதாரரின் மனுவை பரிசீலனை செய்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க மாவட்ட காவல்துறை எஸ்.பி.,க்கு உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை

தினகரன்

புதுக்கோட்டையில், டி.டி.வி. தினகரன் அணியினரின் தொழிலாளர் தினப் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கோரிய வழக்கில், மனுதாரரின் மனுவைப் பரிசீலனைசெய்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க, மாவட்ட காவல்துறை எஸ்.பி-க்கு உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல்செய்துள்ள மனுவில், ``மே 1ல் தொழிலாளர் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, தொழிலாளர்களைக் கௌரவப்படுத்தும் வகையில் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில், மே 1-ம் தேதி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் டி.டி.வி.தினகரன் அணியினர் பொதுக்கூட்டம் நடத்த முடிவுசெய்துள்ளோம். பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கேட்டு, ஏப்ரல் 18-ம் தேதி புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை எஸ்.பி-யிடம் மனு அளித்தேன். அனுமதி மறுத்துவிட்டனர். எனவே, மே 1-ம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி அளித்து உரிய போலீஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும்'' எனக் கூறியிருந்தார்.

இந்த மனு, நீதிபதிகள் செல்வம், பஷீர் அகமது முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் மனுவைப் பரிசீலனைசெய்து, ஏப்ரல் 29-ம் தேதிக்குள் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை எஸ்.பி-க்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!