வெளியிடப்பட்ட நேரம்: 10:40 (26/04/2018)

கடைசி தொடர்பு:10:40 (26/04/2018)

'அந்த நியூஸை வதந்தின்னு சொல்ல மாட்டேன்' - 'கடலோரக் கவிதைகள்’ ரேகா

சீரியலில் நடிக்க ஆர்வமாக கதை கேட்கிறார் ‘கடலோரக் கவிதைகள்’ ரேகா

நடிகை ரேவதியை அடுத்து, ‘கடலோரக் கவிதைகள்’ ரேகாவும் விரைவிலேயே சீரியலில் நடிக்கப்போகிறார். டி.வி ஏரியாவில் லேட்டஸ்ட்டாகக் கிளம்பியிருக்கும் தகவல் இது.

ரேகா

ரேகா என்ன சொல்கிறார்? ‘’இந்தச் செய்தியை வதந்தின்னு சொல்ல மாட்டேன். முன்னாடில்லாம் டி.வி முன்னாடி உட்கார்ந்து சீரியல் பார்க்க எனக்குப் பொறுமை இருக்காது. ஆனா  இப்போ, சில சீரியல்களைப் பார்த்துட்டு வர்றேன். அதுல, என்னோட ஃபேவரைட் ரேவதி நடிச்சுட்டு வர்ற ‘அழகு’. பழைய ஃப்ரெண்ட்ஸ் சிலர்ட்ட பேசினப்ப, ‘ரேவதி நடிக்கிற சீரியல்னு நான் ஆரம்பிச்சாலே, அவங்களும் அதுல நடக்கறதை ஒண்ணு விடாமச் சொல்றாங்க. அந்த நிமிஷமே, ’சீரியல்ங்கிறது சாதாரண மக்கள்கிட்டத்தான் ரீச் ஆகும். அவங்கதான் அதுல நடக்கறதை விலாவாரியா உட்கார்ந்து பேசிட்டிருப்பாங்க’ன்னு நான் நினைச்சது தப்புன்னு தோணுச்சு. சில சீரியல்கள்ல ’அடுத்து என்ன நடக்கும்’னு தெரிஞ்சுக்கிட என்னை மாதிரியான ஆர்ட்டிஸ்ட்களுக்கே ஆர்வமா இருக்கே?

’அழகு’ சீரியல்ல நடிக்கிற ‘தலைவாசல்’ விஜய்கிட்ட பேசினேன். அவர் ஆரம்பத்துல டி.வி-யில இருந்து வந்தவர்தானே? என்னோட சில சந்தேகங்களைக் கேட்டேன். அவர்கிட்டப் பேசினதுலயிருந்து சில விஷயங்கள் க்ளீயராகியிருக்கு, பார்க்கலாம்’ என்கிறார்.

ரேகா ’ரெடி’ சொல்லியாச்சு. எந்தச் சேனல் முந்தப்போகுதோ தெரியலை!