வெளியிடப்பட்ட நேரம்: 11:00 (26/04/2018)

கடைசி தொடர்பு:11:00 (26/04/2018)

விவசாயிகளுக்கு ஒரு லட்சம் இழப்பீடு கோரி வழக்கு: தஞ்சாவூர் கலெக்டருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கில் பதில் அளிக்க தஞ்சாவூர் கலெக்டருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

 உயர்நீதிமன்றம்

கர்நாடகாவிடமிருந்து காவிரி நீரை தமிழக அரசு பெற்றுத் தராததால் 2016-ம் ஆண்டு தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் கடுமையான வறட்சி ஏற்பட்டது. இதனால் நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிரிகள் தண்ணீர் இல்லாமல் கருகின. விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு ஆளானார்கள்.

இந்நிலையில், தஞ்சாவூரைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘தஞ்சை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக தமிழக அரசு அறிவித்தது. வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார். சி.டி.செல்வம், பஷீர் அகமது அடங்கிய அமர்வில் இம்மனு நேற்று விசாரணைக்கு வந்தது. இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை பதில் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டார்கள்.