வெளியிடப்பட்ட நேரம்: 10:00 (26/04/2018)

கடைசி தொடர்பு:10:05 (26/04/2018)

தமிழ்நாடு பார் கவுன்சில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

 

பார் கவுன்சில்

தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி பார் கவுன்சிலுக்கு 25 உறுப்பினர்களைத் தேர்வு செய்தவற்கான தேர்தல் மார்ச் 28-ம் தேதி நடந்தது. மொத்தம் உள்ள 54,000 வழக்கறிஞர்களில் சுமார் 42,000 பேர் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர். இந்தத் தேர்தலில் மொத்தம் 192 பேர் போட்டியிட்டனர். பார் கவுன்சில் தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் ஏப்ரல் 7-ம் தேதி எண்ணப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. நிர்வாக காரணங்களுக்காக அந்த வாக்கு எண்ணும் தேதி இரண்டு முறை தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில், தேர்தல் அதிகாரிகளாக இருந்த ஓய்வுபெற்ற நீதிபதிகள் அக்பர் அலி, மதிவாணன் ஆகியோர் தங்கள் பொறுப்புகளில் இருந்து திடீர் என்று ராஜினாமா செய்துவிட்டனர். இதையடுத்து, நீதிபதி விஜயராகவன் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவர் முன்னிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில், நேற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

மாவட்டம் வாரியாக, முதலில் அனைத்து வாக்குச் சீட்டுகளும் ஓர் இடத்தில் கொட்டப்பட்டது. அவை, 50 எண்ணிக்கையில் தனித்தனியாக பிரிக்கப்பட்டது. அதன் பின்னர், ஒவ்வொரு வாக்கு சீட்டும் ஸ்கேன் செய்யப்பட்டு, அதில் பதிவாகி இருக்கும் வாக்குகள் ஒவ்வொரு வேட்பாளர் கணக்கிலும் சேர்க்கப்படுகிறது. நேற்று, முதல்நாளில் 48 வாக்குள் மட்டுமே எண்ணப்பட்டன. அகர வரிசைப்படி நேற்று அரியலூர் மாவட்ட வாக்குச்சீட்டுகள் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை பார்கவுன்சில் வெப்சைட்டில் லைவ் ஆக காட்டப்படுகிறது. இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குகள் எண்ணப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமை அன்று விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே வேகத்தில் வாக்குகள் எண்ணப்பட்டால் பார் கவுன்சில் தேர்தல் முடிவுகள் வெளியாக 30 நாள் கூட ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க