லாரியில் எரிந்த நிலையில் தொங்கிய டிரைவர் - ஈ.சி.ஆர் சாலையில் பயங்கரம் 

விபத்து

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் லோடு ஏற்றி வந்த டிப்பர் லாரி திடீரெனத் தீப்பிடித்து எரிந்தது. இதில் லாரி டிரைவர் தீயில் கருகிப் பலியானார். 

 தூத்துக்குடி மாவட்டம், மெஞ்ஞானபுரம் அருகில் உள்ள கல்விளைப் பகுதியைச் சேர்ந்தவர் ஆண்டனி ஜார்ஜ். லாரி டிரைவர். இவர், மாமல்லபுரத்திலிருந்து சென்னைக்கு இன்று அதிகாலை டிப்பர் லாரியை ஓட்டிக்கொண்டு வந்தார். லாரியில் கிரசர் பவுடர் லோடு இருந்தது. கோவளம் கிழக்குக் கடற்கரை சாலை, செம்மஞ்சேரி குப்பத்தின் அருகே வந்தபோது லாரி கட்டுப்பாட்டை இழந்தது. இதனால், சாலையின் தடுப்பில் மோதிய லாரி அருகில் உள்ள மின்கம்பத்தில் உரசியது. இதனால் லாரியில் தீப்பிடித்தது. விபத்து ஏற்பட்டவுடன் லாரியிலிருந்து தப்பிக்க டிரைவர் ஆண்டனி ஜார்ஜ் முயற்சி செய்தார். ஆனால், அதற்குள் டீசல் டேங்க் வரை தீ பரவி, கொளுந்துவிட்டு எரிந்தது. இதனால் லாரிக்குள் சிக்கிக் கொண்ட டிரைவர் ஆண்டனி ஜார்ஜ் கருகி உயிரிழந்தார். அதிகாலை 2.30 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்ததால் உதவிக்குக்கூட யாரும் வரவில்லை. 

 இந்தச் சமயத்தில் லாரி தீப் பிடித்து எரிவதைக் கண்டு அவ்வழியாகச் சென்றவர்கள் தீயணைப்பு நிலையத்துக்கும் கேளம்பாக்கம் போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸார், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்து குறித்து கேளம்பாக்கம் இன்ஸ்பெக்டர் பாண்டி விசாரித்துவருகிறார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!