ஹெல்மெட் அணிந்த வாகன ஓட்டிகளை மகிழ்வித்த இன்ஸ்பெக்டர்!

பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இரு சக்கர வாகனத்தில் வருபவர்களை நிறுத்தி அதில் ஹெல்மெட் அணிந்து வருபவர்களைப் பாராட்டி கவரில் ரூ 10பணம் வைத்து வெகுமதி கொடுக்கிறார்.

தமிழகம் முழுவதும் மாவட்ட, வட்டாரப் போக்குவரத்துத்துறை மற்றும் காவல்துறை சார்பில் சாலைப் பாதுகாப்பு 
விழிப்புஉணர்வு வார விழா நடந்துவருகிறது. இதை முன்னிட்டு, ஹெல்மெட் விழிப்புஉணர்வுப் பேரணி, சாலைப்
பாதுகாப்பு விழிப்பு உணர்வு பிரசாரம், துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் ஆகியன நடந்துவருகின்றன.

ஹெல்மட் விழிப்புணர்வு

கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டராகப் பணியாற்றிவருபவர் செல்வம். இவர்,சாலைப் பாதுகாப்பு விழிப்பு உணர்வு பிரசாரத்தை, செய்தியாளர்கள் படம் எடுப்பதற்காக மட்டும் சம்பிரதாயத்துக்கு நடத்தாமல், வித்தியாசமான முறையில் விழிப்பு உணர்வை ஏற்படுத்திவருகிறார்.

பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீஸார், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இருசக்கர வாகனத்தில் வருபவர்களை நிறுத்தி, அதில் ஹெல்மெட் அணிந்து வருபவர்களைப் பாராட்டி, கவரில் 10 ரூபாய் பணம் வைத்துக் கொடுக்கிறார். போலீஸார் வெகுமதியாகக் கொடுப்பது 10 ரூபாய்தான் என்றாலும், அதிக வாகன ஓட்டிகள் உள்ள இடத்தில் போலீஸார் பாராட்ந்த் தரும் வெகுமதியை மகிழ்ச்சியுடன் ஹெல்மட் அணிந்தவர்கள் பெற்றுச் செல்கின்றனர். மற்றவர்களை வண்டியிலேயே அமரவைத்து, சாலைப் பாதுகாப்பு, ஹெல்மட் அணிவதன் அவசியம் குறித்து வகுப்பு எடுக்கிறார். இன்ஸ்பெக்டரின் இந்த வித்தியாசமான விழிப்பு உணர்வுப் பிரசாரம், அப்பகுதியில் வாகன ஓட்டிகளிடையே நன்மதிப்பை ஏற்படுத்திவருகிறது

Do you like the story?

Please Appreciate the Author by clapping!