ரஜினிக்கு வில்லனாகிறாரா விஜய் சேதுபதி?

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த்துடன் இணைந்து விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மெர்க்குரி' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ரஜினிகாந்தை வைத்து படம் இயக்குகிறார் என்றும் அதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகின. அதற்குச் சான்றாக கார்த்திக் சுப்புராஜ் ரஜினியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து, அந்தப் படத்தில் விஜய் சேதுபதியும் நடிக்கலாம் என்று செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.

விஜய் சேதுபதி

இந்நிலையில், சேதுபதி தன் நண்பரான கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடிக்கிறார் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது. அந்தப் படத்தில் அவருக்கு வில்லன் கதாபாத்திரமாக இருக்கலாம் என திரைவட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 'தலைவரின் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த மாதிரி தலைவர் வேற லெவலில் இருப்பார்' என்று கார்த்திக் சுப்புராஜ் சொன்ன நாளிலிருந்து அதற்கான எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்தது. விஜய் சேதுபதியும் அதில் நடிக்கிறார் என்ற தகவலால் மக்கள் செல்வனின் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இவர்கள் இருவரையும் ஒரு ஃப்ரேமில் கார்த்திக் சுப்புராஜ் எப்படி காட்டவிருக்கிறார் என்று கோலிவுட்டே ஆவலுடன் காத்திருக்கிறது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!