``தமிழகத்தில் இருப்பது 154 கட்சிகள்; அங்கீகரிக்கப்பட்டவை 3 கட்சிகளே” - தேர்தல் ஆணையம் தகவல்

தமிழகத்தில் மொத்தம் மூன்று கட்சிகள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஒரு கட்சியிலிருந்து பிரிந்து சென்று புதிய கட்சி தொடங்குவது, புதிதாக அரசியலில் களமிறங்கி அரசியல் கட்சி ஆரம்பிப்பது என மாநிலத்தில் கட்சிகளின் எண்ணிக்கைக்குப் பஞ்சமில்லை. 

இந்நிலையில், தமிழத்தில் இருக்கும் மாநிலக் கட்சிகள் குறித்த தகவல் ஒன்றைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அ.தி.மு.க), திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க) மற்றும் தேசிய முற்போற்கு திராவிட கழகம் (தே.மு.தி.க) ஆகிய மூன்று கட்சிகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டு அங்கீகாரம் பெற்ற மாநிலக் கட்சிகளாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவை தவிர்த்து, ம.தி.மு.க, தமிழ் மாநில காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் பதிவு மட்டுமே செய்யப்பட்டுள்ளது. பதிவு செய்து அங்கீகாரம் பெறாத கட்சிகளாகத் தமிழகத்தில் 154 கட்சிகள் உள்ளன எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!