ஸ்டெர்லைட் ஆலைமீது பெட்ரோல் குண்டு வீச்சு! போலீஸ் குவிப்பால் பதற்றம்

ஸ்டெர்லைட் ஆலையின் முன்பு இன்று அதிகாலையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆலை முன்பு போஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலையின் முன்பு இன்று அதிகாலையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆலை முன்பு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.

ஸ்டெர்லைட்

தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அ.குமரெட்டியாபுரம் பண்டாரம்பட்டி, சில்வர்புரம், மீளவிட்டான் உள்ளிட்ட 18 கிராம மக்களும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆலைக்கான தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி கடந்த மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்தது. ஆலை புதுப்பித்தலுக்காக நிர்வாகம் தரப்பில் மீண்டும் மனு அளிக்கப்பட்ட நிலையில், சில காரணங்களுக்காக விளக்கம் கேட்கப்பட்டு, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்  மனுவை நிராகரித்தது. இதனால், தற்போது வரை ஆலையில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. 

petrol bomb threw in front of sterlite factory

இந்நிலையில்,  இன்று அதிகாலை இரு மர்ம நபர்கள் ஸ்டெர்லைட் ஆலையின் மெயின் கேட்டை நோக்கி பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பி ஓடிச் சென்றுவிட்டனர். இச்சம்பவம் குறித்து ஸ்டெர்லைட் ஆலையின் மக்கள் தொடர்பு அதிகாரி ஜிஜோவிடம் பேசினோம், ``இன்று அதிகாலை சுமார் 1 மணி இருக்கும். ஒரே பைக்கில் வந்த இரண்டு பேர் மெயின் கேட்டை நோக்கி, ஒரு பாட்டிலை வீசிவிட்டுச் சென்றுள்ளனர். சத்தத்துடன் திடீரென வெடித்துத் தீப்பற்றி எரிந்தவுடன் மெயின் கேட் வாட்ச் மேன் பார்த்து அதிகாரிகளிடம் தகவல் கூறினார். உடனே, சிப்காட் காவல் நிலைய போலீஸாருக்குத் தகவல் கூறினோம். போலீஸார் பைக்கில் வந்த மர்மநபர்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்” என்றார். 

police protection of sterlite industry

``ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்று வரும் மக்கள் போராட்டத்தை திசை திருப்ப ஆலை நிர்வாகமே இப்படிச் செய்திருக்கலாம். இதில் மாவட்ட நிர்வாகமும் காவல்துறையினரும் விசாரணை செய்து உண்மை நிலையைக் கண்டறிய வேண்டும்” என ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடி வரும் மக்கள் கூறினர். ``ஸ்டெர்லைட் ஆலைக்குப் போராட்டக்காரர்களால் அச்சுறுத்தல் இருப்பதால் ஆலைக்கும், பணிபுரியும் பணியாளர்களுக்கும், இயந்திரங்களுக்கும் பாதுகாப்பு அளித்திடும் வகையில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்” என வலியுறுத்தி காப்பர் யூனிட்டின் பொதுமேலாளார் சத்தியப்பிரியா சில நாள்களுக்கு முன்பு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி, ``இந்த மனுவைப் பரிசீலனை செய்து போலீஸ் பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக  மாவட்ட எஸ்.பி. நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!