கொளுத்தும் வெயில் - வேதாரண்யம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உப்பு உற்பத்தி அதிகரிப்பு!

Vedaranyam Salt

நாகை மாவட்டம் வேதாரண்யம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால், உப்பு உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் உப்பு உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  

வேதாரண்யம் உப்பு உற்பத்தி

தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக உப்பு உற்பத்தியில் நாகை மாவட்டம் வேதாரண்யம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இங்கு வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியம்பள்ளி, கடினல்வயல், கோடியக்காடு ஆகிய பகுதிகளில் சுமார் 10,000 ஏக்கர் நிலத்தில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், சிறு உப்பு உற்பத்தியாளர்கள் சுமார் 3,500 ஏக்கர் நிலத்தில் உப்பு உற்பத்தி செய்கின்றனர். இத்தொழிலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 25,000 உப்பளத் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆண்டுக்கு சுமார் 6 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாகத் தெரிகிறது.  

தற்போது, வேதாரண்யம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் உப்பு உற்பத்தி அதிகரித்துள்ளது. சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு உப்புக்கு நல்ல விலை கிடைத்திருக்கிது. கடந்த ஆண்டு ஒரு டன் ரூ.400-க்கு விற்பனை செய்யப்பட்ட உப்பு,  நடப்பு ஆண்டில் ரூ.600 முதல் ரூ.800 வரை விற்பனையாகிறது. இதனால் உப்பு வியாபாரிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!