திருப்பூரில் மான் கறி விற்க முயன்ற நபர் கைது!

திருப்பூர் மாவட்டம் கருவலூரை அடுத்துள்ள வனப்பகுதியில் மான் வேட்டையாடி விற்பனை செய்ய முயன்ற இளைஞரை வனத்துறையினர் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்திருக்கிறார்கள்.

வேட்டையாடப்பட்ட மான்

 

திருப்பூர் மாவட்டம் கருவலூரை அடுத்துள்ள ராமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர் அப்பகுதி வனப்பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, நாய் ஒன்று மான் குட்டியைத் துரத்திக்கொண்டு வந்திருக்கிறது. இதைப் பார்த்த சக்திவேல், அந்த நாயை அங்கிருந்து துரத்திவிட்டு, மானை லாவகரமாகப் பிடித்துள்ளார். பின்னர், அந்த மானைக் கொன்று கறியாக விற்பனை செய்யவும் அவர் முயற்சி செய்திருக்கிறார். இந்தத் தகவலை உள்ளூர் ஆட்கள் மூலம் கேள்விப்பட்ட மேட்டுப்பாளையம், சிறுமுகை மற்றும் திருப்பூர் வனச்சரக ஊழியர்கள், உடனடியாகச் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று, மான் கறியை வைத்திருந்த சக்திவேலை மடக்கிப் பிடித்தனர். அப்போது அவரிடம் நீண்ட விசாரணை நடத்திய அதிகாரிகள், பின்னர் அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்திருக்கிறார்கள். திருப்பூர் மாவட்டம் அவினாசி தாலுகா பகுதிகளில் மான்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதும், சமூக விரோதிகளால் அவை அடிக்கடி வேட்டையாடப்படுவதும் தொடர்ந்துகொண்டே இருப்பதாக வேதனைப்படுகிறார்கள் அப்பகுதி மக்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!