வெளியிடப்பட்ட நேரம்: 02:30 (27/04/2018)

கடைசி தொடர்பு:07:59 (27/04/2018)

''ஹாரர் படங்களைப் பார்க்கவும் மாட்டேன்; நடிக்கவும் மாட்டேன் " - அரவிந்த்சாமி 

'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய நடிகர் அரவிந்த்சாமி, ''ஹாரர் படங்கள் எனக்கு பிடிக்காது; அதில் நடிக்கவும் மாட்டேன்" என்றார்.


சித்திக் இயக்கத்தில் அரவிந்த்சாமி, அமலா பால் நடித்திருக்கும் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படம் ஏப்ரல் 27-ல் வெளியாக இருந்தது. ஆனால், திடீரென்று படத்தை மே 11ம் தேதிக்குத் தள்ளி வைத்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பில் சென்னையில் நடைபெற்றது.

அரவிந்த்சாமி

அதில் பேசிய அரவிந்த்சாமி, ''வித்தியாசமான கதைகளில் நடிக்க ஆசைப்படுகிறேன். 'தனி ஒருவன்' படத்தில் வில்லனாக நடித்தேன். அந்தப் படத்தைத் தொடர்ந்து 15 படங்கள் அதே மாதிரியான கேரக்டரில் வந்தது. ஆனால், நான் நடிக்கவில்லை. ஹாரர் ஜானரைத் தவிர எல்லா ஜானர்களிலேயும் நடிக்க ஆசைப்படுகிறேன். காரணம், எனக்கு அது பிடிக்காது. பேய்கள் மீதான நம்பிக்கை இல்லாத காரணத்தால் அந்தப் படங்கள் பார்க்கும்போது சிரிப்புதான் வரும்." என்றார். இதைத்தொடர்ந்து, பேய் இருக்கா, இல்லையா என்ற செய்தியாளர் கேட்ட கேள்விக்கு ''முதலில் மனிதர்கள் இருக்கிறார்களா? முதலில் நல்ல மனிதரை தேடுவோம். அதன் பின் பேயை இருக்கா இல்லையா என்று தேடுவோம்" என்று அவர் கூறிய பதில் அங்குள்ள அனைவரையும் சிந்திக்க வைத்தது. மேலும், ரமேஷ் கண்ணா, தயாரிப்பாளர் முருகன் ஆகியோர் கலந்துகொண்டனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க