கோடை விடுமுறையைக் கொண்டாட ஓவியப் பயிற்சி..! அரசு அருங்காட்சியகம் ஏற்பாடு

கோடை விடுமுறையை மாணவ மாணவிகள் உருப்படியாகக் கொண்டாடும் வகையில், ஓவியங்கள் வரைவதற்கான பயிற்சியை தகுதி வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு அரசு அருங்காட்சியகம் ஏற்பாடு செய்துள்ளது.

கோடை விடுமுறையை மாணவ மாணவிகள் உருப்படியாகக் கொண்டாடும் வகையில், ஓவியப் பயிற்சி தகுதி வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு அரசு அருங்காட்சியகம் ஏற்பாடு செய்துள்ளது.

ஓவியப் பயிற்சி

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்ட நிலையில், ஏராளமான மாணவ மாணவிகள் அரசு அருங்காட்சியகத்துக்கு வருகை தருகிறார்கள். அங்குள்ள பழங்காலச் சிற்பங்கள், மண்ணுக்கு அடியில் புதைந்து கிடந்து கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால தாழிகள், பழங்கால மக்கள் பயன்படுத்திய ஆயுதங்கள், அணிகலன்கள் உள்ளிட்ட பொருள்களைப் பார்வையிட்டு பொழுதைக் கழிக்கிறார்கள். அத்துடன், அருங்காட்சியக வளாகத்தில் உள்ள பூங்காவில் அமர்ந்து செல்கிறார்கள். 

இந்த நிலையில், மாணவ மாணவிகள் ஓய்வுப் பொழுதை உபயோகமான வகையில் செலவு செய்திடுவதற்காக அவர்களுக்கு அரசு அருங்காட்சியகம் சார்பாக ஓவியப் பயிற்சி அளிக்கப்படுகிறது., இந்தப் பயிற்சி வகுப்பில், உலகப் பிரசித்த பெற்ற கிருஷ்ணாபுரம் கோயிலின் சிற்பங்களீன் அழகையும் நுணுக்கத்தையும் விளக்கும் வகையில், அந்த சிற்பங்களின் புகைப்படங்கள் அருங்காட்சியக கூடத்தில் ஒட்டப்பட்டுள்ளன. 

கிருஷ்ணாபுரம் சிற்பங்கள் குறித்து சிற்பி பாமா உரை நிகழ்த்தினார். அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி, கவிஞர் பே.ராஜேந்திரன், நல்லாசிரியர் செல்லப்பா, பொருநை மைந்தன் உள்ளிட்டோர் ஓவியக்கலை குறித்தும் சிற்பக்கலை பற்றியும் சங்ககாலப் பாடல்களில் கூறபட்டுள்ள கலை நயங்கள் பற்றி விரிவாக விளக்கிப் பேசினார்கள். பின்னர், ஓவிய ஆசிரியர் ராஜ்குமார், மாணவ மாணவிகளுக்கு ஓவியங்கள் குறித்த பயிற்சியை அளித்தார். இந்தப் பயிற்சி வரும் 29-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!