வெளியிடப்பட்ட நேரம்: 10:20 (27/04/2018)

கடைசி தொடர்பு:10:20 (27/04/2018)

70 வயது முதியவரால் சிறுமிக்கு நடந்த கொடுமை!

விழுப்புரம் அருகே, 9 வயது சிறுமியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட 70 வயது முதியவரை போலீஸார் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.


70 வயது முதியவரால் சிறுமிக்கு நடந்த கொடுமை!

விழுப்புரம் மாவட்டம், கொத்தபுரிநத்தத்தை அடுத்திருக்கும் கிராமத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமி ஷில்பா (பெயர் மாற்றம்), அங்குள்ள அரசுப் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்துவருகிறார். முழு ஆண்டுத் தேர்வு முடிவடைந்த நிலையில், கோடை விடுமுறையில் வீட்டில் இருந்துள்ளார். சிறுமி ஷில்பா, நேற்று முன்தினம் தனது வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே கிராமத்தைச் சேர்ந்த கோபால் (70) என்பவர், மாணவியை அருகில் உள்ள மறைவான இடத்துக்கு அழைத்துச்சென்று பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அதில் பயந்துபோன ஷில்பா, அழுதுகொண்டே வீட்டுக்கு வந்து தனது பெற்றோர்களிடம் நடந்த சம்பவங்களைக் கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், இதுகுறித்து விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், முதியவர் கோபாலைக் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க