சர்ச்சையில் ஞானவேல்ராஜாவின் புதிய படம் - தயாரிப்பாளர் சங்கம் அதிரடி | gnanevel raja's new movie creates controversy

வெளியிடப்பட்ட நேரம்: 11:00 (27/04/2018)

கடைசி தொடர்பு:11:00 (27/04/2018)

சர்ச்சையில் ஞானவேல்ராஜாவின் புதிய படம் - தயாரிப்பாளர் சங்கம் அதிரடி

புதிய பட்ங்களின் வெளியீட்டில் குழப்பம் வராமல் இருப்பதற்காகவும், பல படங்கள் ஒரே நாளிலேயே வெளிவராமல் இருப்பதற்காகவும் தமிழ் திரைப்பட சஙகத்தால் அமைக்கப்பட்ட சிறப்புக் குழு அனுமதியின்றி 'இருட்டு அறையில் முரட்டு குத்து' ரிலீஸ் தெதி அறிவிப்பு

'இருட்டு அறையில் முரட்டு குத்து' படம் மே 4-ம் தேதி ரிலீஸ் செய்வதாகத் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அறிவித்திருந்தார். இப்படத்தின் வெளியீட்டிற்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்று தயாரிப்பாளர் சங்க ரிலீஸ் கமிட்டி தெரிவித்துள்ளது.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வேலைநிறுத்தம் கிட்டத்தட்ட 50 நாள்கள் கழித்து முடிந்தது. அதன் காரணமாக, புதிய படங்கள் ரிலீஸ் ஆகாமல் இருந்த நிலையில், படங்களின் வெளியீட்டில் எந்த ஒரு குழப்பமும் வராமல் இருப்பதற்காகவும், பல படங்கள் ஒரே நாளிலேயே  வெளிவராமல் இருப்பதற்காகவும்  ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழு, ரிலீஸுக்குத் தயாராக இருக்கும் படங்களைத் தயாரிப்பாளர்களின் விருப்பத்திற்கேற்ப தேதிகளை ஒதுக்கி, முறைப்படுத்தி வருகின்றன. இதற்கிடையில் விஷால், சமந்தா நடித்திருக்கும் 'இரும்புத்திரை' படம், இக்குழுவின் ஒப்புதலைப் பெறாமலேயே மே 11 என அறிவிக்கப்பட்டது. 'இரும்புத்திரை', தயாரிப்பாளர் சங்கத்தின் ஒப்புதல் பெற்றே ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் எனக் கடந்த வாரம்  விஷால் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, ரிலீஸ் ரெகுலேஷன் கமிட்டி ஒப்புதலோடு இப்படம் மே 11-ம் தேதி வெளியாகும் என நேற்று தயாரிப்பாளர் சங்கத்தால் அறிவிக்கப்பட்டது.

விஷால்

சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் ஞானவேல் ராஜா தயாரித்திருக்கும் படம் 'இருட்டு அறையில் முரட்டு குத்து'. கௌதம் கார்த்திக் நடித்திருக்கும் இப்படத்தை மே 4-ம் தேதி ரிலீஸ் செய்வதாகத் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அறிவித்திருந்தார். இதையறிந்த தயாரிப்பாளர் சங்க ரிலீஸ் கமிட்டி, தாங்கள் மே 4-ம் தேதி எந்தப் படத்திற்கும் ரிலீஸ் ஒப்புதல் அளிக்கவில்லை.அந்தப் பட்டியலில் இப்படமும் சேரும் என்று தங்களது செய்தித்தொடர்பு ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். 

ஞானவேல் ராஜா

தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, வேலை நிறுத்தத்தின் ஆரம்பத்தில், தயாரிப்பாளர் சங்கத்தின் தடையை மீறி தனது 'நோட்டா' படத்தின் தொடக்க விழா வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.