மீனாட்சி திருக்கல்யாணம்... இரண்டு டன் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மணமேடை 

மதுரை மக்களின் முக்கிய விழாவான சித்திரை திருவிழா கடந்த 18 ஆம் தேதி தொடங்கியது.

மதுரை மக்களின் முக்கிய விழாவான சித்திரைத் திருவிழா, கடந்த 18-ம் தேதி தொடங்கியது. நாளொரு கொண்டாட்டத்தால்  மதுரையே மகிழ்ச்சியில் திளைத்துவருகிறது. பத்தாம் நாளான  சித்திரைத் திருவிழாவின் முத்தாய்பாக, இன்று காலை மதுரையை ஆளும் அரசி மீனாட்சிக்கும் சுந்தரேஸ்வரருக்கும் திருக்கல்யாணம் மிக சிறப்பாக நடந்தது.  இதற்காக, நேற்று இரவு முதல் கோயில் வளாகம் களை கட்ட ஆரம்பித்தது. சேதுபதி பள்ளியில் மீனாட்சியம்மன் கோயில் பக்தர்கள் சார்பில் மாப்பிள்ளை விருந்து நடந்தது. அங்கு, பல லட்சம் பேருக்கு சமைத்துக்கொண்டே இருக்கிறார்கள். 

மீனாட்சி திருகல்யாணம்


இன்று காலை திருக்கல்யாண மண்டபத்தில், 20 லட்சம் ரூபாய் செலவில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மணமேடையில், மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், வேத மந்திரங்கள் முழங்க மிகச் சிறப்பாக நடந்தது. அதைத் தொடர்ந்து, திருமணக்கோலத்தில் மீனாட்சி -சுந்தரேஸ்வரர் மக்களுக்கு அருளாசி வழங்கினர். இதில் கலந்துகொள்ள, அதிகாலை முதல் மக்கள் கல்யாண மண்டபத்தில் குவிந்தனர். அனைவரும் திருக்கல்யாணத்தைக் காணும் வகையில், கோயில் வளாகத்தைச் சுற்றி  பெரிய அளவு எல்.ஈ.டி திரைகள் மூலம் காண்பிக்கப்பட்டது.

மீனாட்சி

திருமணம் முடிந்ததும், கோயில் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதப் பைகள் வழங்கப்பட்டன. கல்யாண விருந்து, சேதுபதி பள்ளி மைதானத்தில் வழங்கப்பட்டுவருகிறது. கோயிலைச் சுற்றிய அனைத்து வீதிகளிலும் மக்கள் வெள்ளம். கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. வரும் 30-ம் தேதி அழகர் ஆற்றில் இறங்கும் நாள் வரை மதுரை நகரம் மக்களால் நிரம்பி வழியும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!