இந்தியாவில் 24 போலி பல்கலைக்கழகங்கள்! பட்டியலை வெளியிட்டது யூஜிசி | Fake universities; List released by University grants commission

வெளியிடப்பட்ட நேரம்: 14:35 (27/04/2018)

கடைசி தொடர்பு:14:35 (27/04/2018)

இந்தியாவில் 24 போலி பல்கலைக்கழகங்கள்! பட்டியலை வெளியிட்டது யூஜிசி

நாடு முழுவதிலும் உள்ள போலி பல்கலைக்கழகங்களின் பட்டியலை வெளியிட்டிருக்கிறது, பல்கலைக்கழகங்களின் மானியக் குழு.

நாடு முழுவதும் போலி பல்கலைக்கழகங்கள் செயல்பட்டுவருவதாக சமீபகாலங்களாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்த உண்மைத் தன்மையை அறிய தீவிர விசாரணையில் ஈடுபட்டது பல்கலைக்கழக மானியக் குழு. அதில் நாடு முழுவதும் 24 போலி பல்கலைக்கழகங்கள் அங்கீகாரம் பெறாமல் செயல்பட்டு வருவதாகக் கண்டறியப்பட்டது. அதையடுத்து அந்தப் போலியான பல்கலைக்கழகங்களின் பட்டியலை தனது இணையப் பக்கத்தில் வெளியிட்டிருப்பதோடு, இந்தக் கல்வி நிறுவனங்கள் அளிக்கும் சான்றிதழ்கள் செல்லாது என்றும் அறிவித்திருக்கிறது பல்கலைக்கழக மானியக் குழு.

அதன்படி பீகாரில் 1, டெல்லியில் 7, கர்நாடகாவில் 1, கேரளாவில் 1, மஹாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்கத்தில் 3, உத்தரப்பிரதேசத்தில் 8, ஒடிசாவில் 2, புதுச்சேரியில் 1 என்று தெரிவித்திருக்கிறது. மாணவர்களின் நலனைக் கருதியே இந்தப் பட்டியலை வெளியிட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது பல்கலைக்கழகங்களின் மானியக் குழு.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க