'வீரப்பன் இருந்திருந்தால் காவிரியில் இந்த நிலைமை வந்திருக்குமா?’ - முத்துலட்சுமி கேள்வி

'வீரப்பன் இருந்திருந்தால் காவிரி பிரச்னையில் இந்த நிலைமை வந்திருக்குமா?’ எனக் கேள்வி எழுப்புகிறார் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி.

முத்துலெட்சுமி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லணையில் காவிரி உரிமை மீட்பு ஒன்று கூடல் போராட்டம் நடந்தது. காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தலைமையில் நடக்கும் இந்தப் போராட்டத்தில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், எம்.எல்.ஏ-க்கள் தமிமுன் அன்சாரி, தனியரசு, இயக்குநர் பாரதிராஜா, அமீர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றி வருகின்றனர். 

இந்த நிகழ்ச்சியில் பேசிய வீரப்பன்  மனைவி முத்துலட்சுமி, "தமிழகம் முழுவதும் போராட்ட மயமாகியுள்ளது. காவிரி, நெடுவாசல், நியூட்ரினோ எனப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திசையெங்கும் தமிழர்கள் வீதியில் இறங்கிப் போராடி வருகின்றனர். எனது கணவர் வீரப்பன் இருந்திருந்தால் காவிரிக்காக நாம் போராடும் சூழ்நிலை வந்திருக்குமா. நீதிமன்றம் உத்தரவிட்டும்கூட அதை மத்திய அரசு மதிக்கவில்லை. ஆனால், அவர் உயிரோடு இருந்திருந்தால், இந்தநிலை வந்திருக்காது. அவரின் ஒற்றை வீடியோவுக்கு இருந்த மதிப்பு இப்போது இல்லை. தமிழர்களின் உரிமையை மதிக்காத இவர்களை அப்புறப்படுத்த போராட்டங்களை முன்னெடுப்போம். மக்கள் போராட்டங்களில் நிச்சயம் நானும் துணை நிற்பேன்" எனக் கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!