'தமிழர்கள் ஒருபோதும் இந்த அநீதியை மறக்க மாட்டார்கள்' - மத்திய அரசுக்கு கமல் கண்டனம்!

காவிரி வரைவு திட்டத்தைத் தாக்கல் செய்ய மேலும் 2 வாரம் அவகாசம் கோரியுள்ள மத்திய அரசுக்கு நடிகர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

கமல்ஹாசன்

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் கொடுத்த 6 வார காலஅவகாசம் முடிந்தும் மத்திய அரசு மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. மத்திய அரசின் செயல்பாடுகளை எதிர்த்து தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தது. இதை விசாரித்த நீதிபதிகள், மே 3-ம் தேதிக்குள் காவிரி தொடர்பான வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். 

இந்நிலையில் இந்த உத்தரவை நிறைவேற்ற மேலும் இரண்டு வாரங்கள் அவகாசம் வேண்டும் என மத்திய அரசு முறையிட்டுள்ளது. இதற்குத் தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பத் தொடங்கியுள்ளன. பல்வேறு அரசியல் தலைவர்களும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டரில், ''காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல், மீண்டும் தாமதம் செய்கிறது மத்திய அரசு. 'தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி.' இந்த அநீதியைத் தமிழர்கள் ஒருபோதும் மறந்துவிட மாட்டார்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!