சிகிச்சைக்கு வந்த பெண்ணை ஆபாசமாக படம் எடுத்த டாக்டர் கைது! | doctor arrested for illegally taken photo who came to treatment

வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (28/04/2018)

கடைசி தொடர்பு:00:00 (28/04/2018)

சிகிச்சைக்கு வந்த பெண்ணை ஆபாசமாக படம் எடுத்த டாக்டர் கைது!

சென்னை மயிலாப்பூரில் கிளினிக் நடத்திய டாக்டர் சிகிச்சைக்கு வந்த பெண்ணை ஆபாசமாக செல்போனில் படம் எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

டாக்டர் சிவகுருநாதன்

சென்னை மயிலாப்பூரில் உள்ள க்ளினிக்கிற்கு சிகிச்சைக்கு இன்று ஒரு இளம் தம்பதி சென்றுள்ளனர். டாக்டரிடம் தன்னுடைய மனைவிக்கு இதய பகுதியில் வலி இருப்பதாக கணவர் கூறியிருக்கிறார். உடனே டாக்டர், 'உங்கள் மனைவியை செக்அப் செய்ய வேண்டும், நீங்கள் கொஞ்சம் வெளியில் இருங்கள்' என்று கணவரிடம் கூற உடனே அவரும் வெளியில் காத்திருந்துள்ளார். நீண்ட நேரமாகியும் எந்த தகவலும் இல்லை. இதனால் கதவு வழியாக உள்ளே எட்டிப்பார்த்த கணவருக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது. படுத்திருந்த அவரின் மனைவியை டாக்டர் ஆபாசமாக தன்னுடைய செல்போனில் படம் எடுத்துக் கொண்டிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த கணவர், டாக்டரிடம் தகராறு செய்துள்ளார். அதன்பிறகே அங்கு நடந்த சம்பவம் அந்த பெண்ணுக்கு தெரிந்து, அவரும் டாக்டரிடம் சண்டை போட்டுள்ளார். உடனே சுதாரித்த டாக்டர், செல்போனிலிருந்த படங்களை அழித்ததோடு, மெமரி கார்டையும் தூக்கி எரிந்துள்ளார். இதையடுத்து டாக்டரை அங்கிருந்த பொதுமக்கள் உதவியோடு மயிலாப்பூர் காவல் நிலையத்தில் அந்த தம்பதியினர் ஒப்படைத்தனர். 

போலீஸார் நடத்திய விசாரணையில் டாக்டர் பெயர் சிவகுருநாதன் என்பது தெரியவந்தது. அவருக்கு வயது 64. தொடர்ந்து போலீஸார் விசாரித்து வருகின்ளனர். டாக்டரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட மற்றொரு செல்போனில் இளம்பெண்களின் புகைப்படங்கள் இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் மயிலாப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.