வெளியிடப்பட்ட நேரம்: 06:39 (28/04/2018)

கடைசி தொடர்பு:12:13 (29/04/2018)

வடகொரிய அதிபருக்கு மனம் குளிர விருந்தளித்து அசத்திய தென்கொரியா!

வடகொரிய அதிபருடன் தென்கொரிய தலைவர் சந்திப்பு

வடகொரிய அதிபருக்கு மனம் குளிர விருந்தளித்து அசத்திய தென்கொரியா!

ப்போதும் முட்டி மோதிக் கொண்டிருக்கும் வடகொரியாவும் தென்கொரியாவும் நேசத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளன. வடகொரிய அதிபர் அதற்கான விதையை விதைத்துள்ளார். முரட்டுத்தனமும் குழந்தைத்தனமும் நிறைந்த தலைவராக பார்க்கப்பட்ட கிம் ஜாங் அன் நடவடிக்கை உலக நாடுகளை வியக்க வைத்துள்ளது.  1950-53 ம் ஆண்டு கொரிய போருக்கு பிறகு தென்கொரிய மண்ணுக்குள் காலடி வைத்த முதல் வட கொரிய அதிபர் என்ற பெருமையை கிம் ஜாங் அன் பெற்றுள்ளார்.

தென்கொரிய தலைவருடன் கிம் ஜாங் அன் சந்திப்பு

தென்கொரிய எல்லையில் பாமுன்ஞ் என்ற கிராமத்தில் உள்ள தென்கொரிய அதிபருக்கான ப்ளு ஹவுஸ் மேன்சனில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. நேற்று மாலை 6.15 மணியளவில் தென்கொரியாவுக்குள் காலடி வைத்த  வடகொரிய அதிபரை தென்கொரிய பிரதமர் ஜே இன் மூன் கைகுலுக்கி வரவேற்றார் வடகொரிய அதிபருடன் அவரின் மனைவி ரி சால் ஜூ, சகோதரி கிம் யோ ஜாங் ஆகியோரும் தென்கொரியாவுக்கு விஜயம் செய்தனர்.  கிம் ஜாங் அன், ''இது வரலாற்றுத்தருமான நிகழ்வு. திறந்த மனதுடன் பல்வேறு அரசியல் நிகழ்வுகள் விவாதிக்கப்பட்டன '' என்று தெரிவித்துள்ளார். 

வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன்னுக்கு விருந்து

இந்த மேன்சனில் வட கொரிய அதிபருக்கு தென்கொரிய தலைவர்  இரவு விருந்து அளித்தார்.. விருந்தில் தென்கொரிய, வடகொரிய பதார்த்தங்கள் பரிமாறப்பட்டன. வட கொரிய அதிபருக்கு பிடித்தமான Cold buckwheat நுடுல்ஸ் விருந்தில் இடம் பெற்றிருந்தது. வட கொரிய அதிபர் ஸ்விட்சர்லாந்தில் படித்தவர்.  அதனால், ஸ்விஸ் நாட்டு உணவையும் விரும்பி சாப்பிடுவார். உருளைக்கிழங்கில் தயாரிக்கப்படும் l Swiss potato fritter உணவும் கிம்முக்கு பரிமாறப்பட்டது. கடல் உணவுகள், மாட்டிறைச்சி ரோஸ்ட் போன்றவையும்  அன் விரும்பி உண்டார். 

தென்கொரிய பிரதமர், வடகொரிய அதிபரின் சந்திப்பு பாலஸ்தீன தலைவர் அரபாத் இஸ்ரேலிய பிரதமர் ராபின், கியூபா அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ அமெரிக்க அதிபர் ஒபாமா சந்திப்புக்கு இணையாக கருதப்படுகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க