வெளியிடப்பட்ட நேரம்: 05:00 (28/04/2018)

கடைசி தொடர்பு:05:00 (28/04/2018)

அசாராம் பாபு பெண்களைத் தேர்வு செய்வது எப்படி? உதவியாளரின் வாக்குமூலம்

அசாராம் பாபு பெண்களைத் தேர்வு செய்வது எப்படி? உதவியாளரின் வாக்குமூலம்

பாலியல் பலாத்கார வழக்கில் ஆயுள் தண்டனைக்குள்ளான ஆசாராம் பாபு பற்றிய அதிர்ச்சி தகவல்கள் வெளி வந்துள்ளன. இந்த வழக்கில் அசாராம் பாபுவுக்கு எதிராக சாட்சியளித்த ராகுல் சச்சாரின் வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது, 'அசாராம் பாபு பெண்களை, சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்வதை ஒரு பாவம் என்றே கருதவில்லை. தன்னை போன்ற சாமியார்கள், புனிதமானவர்கள் பாலியல் வன்கொடுமை செய்வது பாவம் இல்லை என்று நம்பினார்.

அசாராம் பாபு

புஷ்கர் நகரம், பிவானி, அகமதாபாத் நகரங்களில் உள்ள ஆசிரமங்களில் அவருக்கு சொகுசு இல்லங்கள் உள்ளன. இங்கு வைத்துதான் தான் விரும்பிய பெண்களை அவர் பாலியல் வன்கொடுமை செய்வார். ஆண்மை விருத்திக்காக ஊசியும் போட்டுக் கொள்வார். ஆசாராம் வருவதற்கு முன்னரே 3 பெண்களை அங்கே தேர்வு செய்து தங்க வைத்து விடுவார்கள். அதில், தனக்கு பிடித்தமானவரை தேர்ந்தெடுத்துக்கொள்வார். சில நேரங்களில் பெண்களுக்கு ஓபியம் போன்ற போதை மருந்தையும் கொடுப்பார்'' என்று தெரிவித்துள்ளார் 

இந்த ராகுல் சச்சர் ஆசாராம் பாபுவின் உதவியாளராக இருந்தவர். அசாராம் சொகுசு இல்லங்கள் இவர் பராமரிப்பில்தான் இருந்தன. இந்த இல்லத்தில் வைத்து பெண் ஒருவரை வன்கொடுமை செய்ததை ராகுல் பார்த்து விட்டார். 'சாமியார்கள் இப்படி செய்யலாமா' என்று ராகுல் அசாராமிடம்  கேள்வி எழுப்பிய போது, 'புனிதமானவர்களுக்கு இது பாவம் இல்லை' என்று பதில் அளித்துள்ளார். தொடர்ந்து, ராகுல் சச்சார், அசாராமின் உல்லாச வாழ்க்கைக்கு இடையூராக இருக்கவே அவரின் பாதுகாவலர்களால்  ஆசிரமத்தில் இருந்து துரத்தப்பட்டார். அசாராம் மீது பாலியல் புகார் சுமத்தப்பட்டதும் ராகுல் கச்சார் போலீசில் அவரது வாக்குமுலத்தை அளித்தார். 

அசாராம் பாபுவின் ஆசிரமத்தில் கருக்கலைப்பு கூட நடந்துள்ளதாகவும் ராகுல் கச்சார் தன் வாக்குமூலத்தில் கூறியுள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க