மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் தேரோட்டம்! - லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

மதுரை மீனாட்சியம்மன் கோயிலின்  சித்திரை திருவிழா கொண்டாட்டத்தின் மற்றொரு முக்கிய நிகழ்வாக

மதுரை மீனாட்சியம்மன் கோயிலின்  சித்திரைத் திருவிழா கொண்டாட்டத்தின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியாக, இன்று காலை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருத்தேரோட்டம் நடந்தது. தேரோட்டத்தைக் காண லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்திருந்து ஆசிபெற்றனர். 

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் தேரோட்டம்


சித்திரை மாதத்தில், தமிழகம் முழுவதும்  கோயில்களில் திருவிழா கொண்டாடப்படும். அவற்றில் மதுரை சித்திரைத் திருவிழா தனித்தமையுடையது. கடந்த 18-ம் தேதி, கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவில் நேற்று, மதுரையை ஆளும் அரசி மீனாட்சியம்மனுக்கு திருக்கல்யாணம் வெகு சிறப்பாக நடந்தது. அதைத் தொடர்ந்து, இரவு பூப்பல்லக்கில் அம்மனும், சுவாமியும் மாசி வீதிகளில் வலம் வந்தனர். அடுத்து, இன்று காலை திருத்தேரோட்டம் நடந்தது. இதைக் காண பல மாவட்டங்களிலிருந்தும் பொதுமக்கள் அதிகாலை முதல் மாசி வீதிகளில் குவியத்தொடங்கினர். மங்கல வாத்தியங்கள், மேளதாளம் முழங்க, இன்று காலை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கலெக்டர் வீர ராகவ ராவ் வடம் பிடித்துத் தேரோட்டத்தைத் தொடங்கிவைத்தனர்.

மதுரை மீனாட்சி

மீனாட்சி சுந்தரேஸ்வரர் தம்பதியாக தேரில் வந்ததைப் பார்த்து பக்தர்கள் வணங்கினார்கள். மாசி வீதிகளில் தேர் ஆடி அசைந்து வருவதைப் பார்த்து பலர் பக்திப் பரவசமடைந்தார்கள். பொதுமக்களுக்கு ஆங்காங்கே சிற்றுண்டி, குளிர்பானங்களைப் பலர் வழங்கிக் கொண்டிருந்தார்கள். வெளிநாட்டினர் தேரோட்டத்தைக் கண்டுகளிக்கும் வகையில், அதற்குத் தனியாக மேடை அமைக்கப்பட்டிருந்தது. அமைச்சர் வருகைக்காக நீண்ட நேரம் தேர் காத்திருந்தது என்று பக்தர்கள் புகார் தெரிவித்தார்கள். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!