'11 எம்.எல்.ஏ-க்கள் தீர்ப்பில் அரசியல் தலையீடு' - திருமாவளவன் பகீர்

"ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ-க்கள் விவகாரத்தில், சாட்சிகள், ஆவணங்கள்,  வாதங்கள்  உள்ளிட்டவற்றின்  அடிப்படையில்  ஆதாரங்களை  வைத்து,  தீர்ப்பு  இல்லாமல் அரசியல்  சூழல்நிலை...  அரசியல்  தலையீடுகளுக்கு ஏற்ப  வழங்கப்பட்ட  தீர்ப்பு" என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.. 

திருமாவளவன்

வன்கொடுமை தடுப்புச் சட்டத் திருத்தத்தைக் கண்டித்து, உண்ணாவிரத நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக தூத்துக்குடி விமானநிலையம் வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடும் மக்களின் உணர்வுகளை மத்திய, மாநில அரசுகள் பொருட்படுத்தவில்லை. மக்களுக்கும் சுற்றுப்புறத்துக்கும் கேடு விளைவிக்கும் இந்த ஆலையை உடனே மூட வேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, வைகோ மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. ஸ்டெர்லைட்  ஆலைக்கு எதிராகப் போராடும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து, வி.சி.க சார்பில் மே 7-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.  அதில், நான் கலந்துகொள்ள இருக்கிறேன். 

ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ-க்கள் விவகாரத்தில், சாட்சிகள்,  ஆவணங்கள்,  வாதங்கள்  உள்ளிட்டவைகளின்  அடிப்படையில்  ஆதாரங்களை  வைத்து,  தீர்ப்பு  இல்லாமல்  அரசியல்  சூழல்நிலை...  அரசியல்  தலையீடுகளுக்கு ஏற்ப  வழங்கப்பட்ட  தீர்ப்பு. சபாநாயகர் அதிகாரத்தில் தலையிடலாம் என்பதற்குப் பல முன் உதாரணங்கள் உள்ளன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு கால அவகாசம் கேட்டிருப்பது, தமிழக மக்களை வஞ்சிக்கும் செயலாகும்" எனக் கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!