'பேருந்தின் மேற்கூரையிலிருந்த ஸ்டெப்னி டயர் வெடித்து விபத்து!’ - 20 பேர் காயம் | 20 passengers injured in Panruti bus accident

வெளியிடப்பட்ட நேரம்: 17:58 (28/04/2018)

கடைசி தொடர்பு:17:58 (28/04/2018)

'பேருந்தின் மேற்கூரையிலிருந்த ஸ்டெப்னி டயர் வெடித்து விபத்து!’ - 20 பேர் காயம்

. இதில் பஸ்சின் மேற்கூரை பெயர்ந்து சிதறியது. இதில் பஸ்சில் பயணம் செய்த அனிதா(30), மலர்கொடி(48), ஆனந்தாயி(50), ரஞ்சிதா(23), உஷாராணி(25) உட்பட 20 பேர் காயமடைந்தனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே ஓடும் தனியார் பேருந்தின் மேற்கூரையிலிருந்த ஸ்டெப்னி டயர் வெடித்ததில், பயணிகள் 20 பேருக்குக் காயம் ஏற்பட்டது. 

பண்ருட்டி தனியார் பேருந்து

பண்ருட்டி அருகே உள்ள சேர்ந்தநாட்டிலிருந்து பண்ருட்டி நோக்கி தனியார் பேருந்து ஒன்று வந்துகொண்டிருந்தது.  அந்தப் பேருந்தில் சுமார் 40 பயணிகள் பயணம் செய்துள்ளனர். சின்ன சேமக்கோட்டை என்ற இடத்தில் வந்தபோது, பஸ்ஸின் மேற் கூரையில் இருந்த ஸ்டெப்னி டயர் வெடித்தில், பஸ்ஸின் மேற்கூரை பெயர்ந்து சிதறியது. இந்த விபத்தில், பயணிகள் அனிதா (30), மலர்கொடி (48), ஆனந்தாயி (50), ரஞ்சிதா (23), உஷாராணி (25) உள்பட 20 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சைபெற்றுவருகின்றனர். இந்த விபத்துகுறித்து பண்ருட்டி புதுப்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதுகுறித்து பஸ்ஸில் பயணம்செய்த பயணி ரமேஷ் (பண்ருட்டி) கூறுகையில், ''பஸ் வேகமாகச் சென்றுகொண்டிருந்தபோது, பயங்கர வெடி சத்தம் கேட்டது. டிரைவர், பஸ்ஸை உடனடியாக நிறுத்தினார். குண்டு வெடித்ததுபோல இருந்தது எனக் கூறி பதற்றத்துடன் அவசரமாக அனைவரும் இறங்கினோம். பயணிகள் இறங்கிய பின், பார்த்தபோது பஸ்சின் மேல் கூரை, ரவுண்டாகப் பெயர்ந்திருந்தது.  மேல்கூரையில் இருந்த ஸ்டெப்னி டயர் கடுமையான வெயிலில் வெடித்தது தெரிந்தது. இதனால், மேற் கூரையில் இருந்த மைக்கா துகள்கள், மரப் பலகைகள் உடைந்து பயணிகள்மீது பட்டு காயமடைந்தனர்’’ என்று தெரிவித்தார்.