வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (28/04/2018)

கடைசி தொடர்பு:21:00 (28/04/2018)

சிறையில் செல்போன் வைத்திருந்த வழக்கிலிருந்து முருகன் விடுவிப்பு..!

சிறையில் செல்போன் வைத்திருந்த வழக்கிலிருந்து ராஜீவ் கொலைக் குற்றவாளி முருகன் விடுவிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியாக வேலூர் ஆண்கள் சிறையில் உள்ளார் முருகன். ராஜீவ் கொலை வழக்கில் சிக்கியுள்ள 7 தமிழர்களையும் விடுவிக்கக் கோரி  போராட்டங்கள் நடந்துவரும் நிலையில், சமீபத்தில் ஜீவ சமாதி அடைய அனுமதிக்கக் கோரி, முருகன் சிறையில் உண்ணாவிரதம் இருந்தார்.  இதற்கிடையே, கடந்த ஆண்டு மார்ச் மாதம் 26-ம் தேதி, 2 செல்போன்கள் 2 சிம்கார்டுகள் மற்றும் சார்ஜர் வைத்திருந்ததாக முருகன் மீது சிறைத்துறையால் வழக்குத் தொடுக்கப்பட்டது. 

இந்த வழக்கு, வேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 1-ல் நடைபெற்றுவந்தது. கடந்த சில மாதங்களாக நடந்துவந்த இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அதன்படி வழக்கிலிருந்து முருகனை விடுவித்து, வேலூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பின்னர், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் முருகன், மீண்டும் வேலூர் ஆண்கள் மத்திய சிறைக்கு கொண்டுசெல்லப்பட்டார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க