வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (28/04/2018)

கடைசி தொடர்பு:23:30 (28/04/2018)

கழிவுநீர், மின்கசிவு, பள்ளம்... அலறும் ஐ.சி.எஃப்.வாசிகள் !

கழிவு நீருக்கான பைப் லைனும் சிலந்திவலை போல ஒரே இடத்தில் பின்னிக் கிடந்ததையும் அப்போதுதான் நாங்கள் பார்த்தோம். இது போதாது என்று ஏரியா முழுவதும் ஒவ்வொரு துறையிலும் வந்து வெட்டிப் போட்டு விட்டுச் செல்லும் பள்ளங்களும் பலரைக் கீழே தள்ளிக் கொண்டிருக்கிறது. அதிகாரிகளைக் கையில் போட்டுக் கொண்டு, பைப் லைன் இணைப்புகளை தேவைப்படும்  இடத்துக்கு 'பலசாலிகள்'  பொருத்திக் கொள்வதையும் அப்போதுதான் பார்த்தோம். இந்தப் பகுதியின் கழிவுநீர் பைப்-லைன்கள், ஐ.சி.எஃப். குளத்தில் போய்க் கலக்கும் படி யாரோ இணைப்பைக் கொடுத்துள்ளதையே அன்றுதான் கண்டு பிடித்தனர்

கழிவுநீர்


ழிவுநீர் அடைப்பைச் சரி செய்யக் கோரி அதிகாரிகளைச் சந்திக்கும் மக்கள்  எப்படிப்பட்டச் சோதனைகளைச் சந்திக்கிறார்கள் என்பதற்கு, சின்ன ஒரு சாட்சி தான்  ஐ.சி.எஃப்., தெற்கு திருமலை 3-வது தெருவில் வசிக்கும் மக்களின் அனுபவம். இதுபற்றி அவர்கள் கூறுகையில்,  ''சார், எங்க தெருவிலும் பக்கத்தில் உள்ள சில தெருக்களிலும், பல நாள்களாக மின்சாரம் இல்லை. வெயில் காலம் என்பதாலும், பள்ளி விடுமுறை என்பதாலும் பிள்ளைகளை வைத்துக் கொண்டு பெரிதும் கஷ்டப்பட்டோம். பலநாள் முயற்சிக்குப் பின், மின்வாரியத்தில் இருந்து ஆள்கள் வந்தார்கள். 'வீடுகளின் முன்னால் இப்படி கழிவுநீர் தேங்கி நிற்கிறபோது நாங்கள் கரண்ட் பிரச்னையைப் பார்க்க முடியாது' என்று போய் விட்டார்கள்.

அடுத்து நாங்கள் கழிவு நீரகற்று அலுவலகத்தில் போய் இதைச் சொன்னோம். அவர்களும் வேக வேகமாக, இரண்டு நாள் கழித்து வந்து,ஏரியாவைப் பார்த்தார்கள். கையில் கடப்பாரை, வலை அது இது என்று கொண்டு வந்திருந்தார்கள். கழிவுநீர் தேங்கியுள்ள இடத்தில் அவர்கள் கைவைத்த போது, அங்கு ஷாக் அடித்தது.  'ஷாக் அடிக்கும் போது எங்களால் ஒன்றும் செய்ய முடியாது, கழிவு நீராக மட்டும் இருந்தால் நாங்கள் சரி செய்யலாம், இங்கே குடிநீரில் கழிவு நீர் கலந்து விட்டிருக்கிறது. இங்கிருந்து குடிநீர் பைப் லைனைத் தனியாகப் பிரித்தால் தான் நாங்கள் வேலைபார்க்க முடியும் ' என்று சொல்லி விட்டு அவர்களும் போய் விட்டனர். 

மழைநீர்க் கால்வாயும், குடிநீருக்கான பொது இணைப்பும், கழிவு நீருக்கான பைப் லைனும் சிலந்திவலை போல ஒரே இடத்தில் பின்னிக் கிடந்ததையும் அப்போதுதான் நாங்கள் பார்த்தோம். இது போதாது என்று ஏரியா முழுவதும் ஒவ்வொரு துறையிலும் வந்து வெட்டிப் போட்டு விட்டுச் செல்லும் பள்ளங்களும் பலரைக் கீழே தள்ளிக் கொண்டிருக்கிறது. அதிகாரிகளைக் கையில் போட்டுக் கொண்டு, பைப் லைன் இணைப்புகளைத் தேவைப்படும் இடத்துக்கு 'பலசாலிகள்' பொருத்திக் கொள்வதையும் அப்போதுதான் பார்த்தோம். இந்தப் பகுதியின் கழிவுநீர் பைப்-லைன்கள், ஐ.சி.எஃப். குளத்தில் போய்க் கலக்கும்படி யாரோ இணைப்பைக் கொடுத்துள்ளதையே அன்றுதான் கண்டுபிடித்தனர். உடனே, இணைப்பையும் துண்டித்து விட்டனர். ஏற்கெனவே உள்ள கழிவுநீரோடு இதுவும், கூடுதலாய் இப்போது ஏரியாவை நாற வைத்துக் கொண்டிருக்கிறது" என்றனர் பரிதாபமாய்.

கழிவுநீர்

இப்பகுதியில் வசிக்கும் சமூக ஆர்வலர் எஸ்.கந்தசாமி கூறும்போது,   ''இந்த ஏரியாவிலுள்ள கழிவுநீர் விவகாரம், மின் தடை, குடிநீரில் கழிவு நீர் கலந்து விடுவது போன்றவை தொடர்பாக மட்டுமே 5 முறை புகார் கொடுத்திருக்கிறேன். நேரிலும் போய் புகார் சொல்லிவிட்டு வந்திருக்கிறேன். ஒன்றும் நடக்கவில்லை. மழைக் காலமாக இருந்தால் ஊர் நாறி விடும். ஆனால் மின் கசிவுக்கு மழை, வெயில் கிடையாதே!. யாரைப் பலிவாங்க அதிகாரிகள் காத்திருக்கிறார்களோ தெரியவில்லை?" என்றார்.