'கர்நாடக தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெறாது' - புகழேந்தி ஆருடம்..! | BJP will not win in Karnataka elections says pugazhendi

வெளியிடப்பட்ட நேரம்: 01:00 (29/04/2018)

கடைசி தொடர்பு:01:00 (29/04/2018)

'கர்நாடக தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெறாது' - புகழேந்தி ஆருடம்..!

புகழேந்தி

'கர்நாடகாவில் மோடிக்கு எதிரான அலை வீசுகிறது. எனவே கர்நாடக தேர்தலில் காங்கிரஸூம், ஜனதா தளமும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது' என புகழேந்தி தெரிவித்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி இன்று சேலம் வந்திருந்தார். அப்போது பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அதில், ''11 எம்.எல்.ஏ.,க்கள் தீர்ப்பில் நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்ப்பார்த்தோம். ஆனால் இந்த தீர்ப்பு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. 18 எம்.எல்.ஏ-கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் எங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும்.

நாடு முழுவதும் முதலில் எதிர்பார்க்கப்பட்ட தீர்ப்பு 18 சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தீர்ப்பு தான். ஏன் என்றால் 18 தொகுதிகளும் காலியாக உள்ளது. அந்த தொகுதியில் எந்த பணிகளும் நடைபெறவில்லை. ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக 11 சட்டமன்ற உறுப்பினர்களின் தீர்ப்பை உயர் நீதிமன்றம் முதலில் வெளியிட்டு உள்ளது.

குட்கா விவகாரத்தில் போலீஸ் துறையை கையில் வைத்துள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான் முதலில் பதவி விலக வேண்டும். இதை தொடர்ந்து இதில் தொடர்புடைய அமைச்சர்களும் தார்மீக அடிப்படையில் பதவி விலக வேண்டும். ஆனால் இது வெட்கம் கெட்ட அரசு. கொள்ளை அடிப்பதற்கு துணிந்து விட்டனர். எனவே இவர்களிடம் அதை எதிர்பார்க்க முடியாது. மோடி இருக்கும் வரை காவிரி மேலாண்மை ஆணையம் வராது. கர்நாடக தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெறாது. கர்நாடகாவில் மோடிக்கு எதிரான அலை வீசுகிறது. எனவே காங்கிரஸூக்கும், ஜனதா தளத்திற்கும் தான் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.  நாங்களும் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என பிரசாரம் செய்து வருகிறோம்'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க