தமிழகத்தில் 5 ஆயிரம் பள்ளிகள் மூடும் அபாயத்தில் உள்ளது...! ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு | Five thousand schools are closing stage in tamilnadu says all india teachers association

வெளியிடப்பட்ட நேரம்: 06:40 (29/04/2018)

கடைசி தொடர்பு:06:40 (29/04/2018)

தமிழகத்தில் 5 ஆயிரம் பள்ளிகள் மூடும் அபாயத்தில் உள்ளது...! ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு

புதிய பாடத்திட்டங்களை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், ஆசிரியர் பணியிடங்களைக் குறைத்து விட்டு யாரை வைத்து பாடம் நடத்த முடியும் என்பது தெரியவில்லை. தமிழகத்தில் 5 ஆயிரம் பள்ளிகள் மூடப்படும் அபாயம் உள்ளது என அகில இந்திய ஆசிரியர் கூட்டணி தேசியச் செயலாளர் குற்றச்சாட்டி உள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் பணிநிறைவு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. 

பின்னர், அகில இந்திய ஆசிரியர் கூட்டணி தேசியச் செயலாளர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசுகையில், "புதிய ஓய்வூதியத் திட்டத்தில் 4 லட்சத்து 75ஆயிரம் பேரிடம் வசூலிக்கப்பட்ட ரூ.18 ஆயிரம் கோடி மத்திய தொகுப்பு வாரிய ஆணைத்திற்கு அனுப்பமால்  இலவச திட்டங்களுக்கு தமிழக அரசு பணத்தினை செலவு செய்து வருகிறது. இதற்கு கடும் கண்டனத்தினை தெரிவித்து கொள்கிறோம். 

புதிய ஓய்வூதியத் திட்டத்தினை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வுதியத் திட்டத்தினை அமுல்படுத்த வேண்டும். 7வது ஊதியக்குழு அறிவிக்கப்பட்டதோடு சரி, அரசு இதுவரை நிலுவைத்தொகை வழங்கவில்லை. இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகள் களைய வேண்டும், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப சொன்னால் அரசு பணியிடங்களை குறைக்க குழு அமைத்துள்ளது. 

புதிய பாடத்திட்டங்களை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், ஆசிரியர் பணியிடங்களை  குறைத்து விட்டு யாரை வைத்து பாடம் நடத்த முடியும் என்பது தெரியவில்லை. காமராஜர் ஆட்சிக் காலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போதுள்ள மத்திய, மாநில அரசுகள் பள்ளிகளை மூட சொல்கிறது. தமிழகத்தில் 5 ஆயிரம் பள்ளிகள் மூடக்கூடிய அபாயத்தில் உள்ளது. 

ஆசிரியர் மாறுதலுக்கு விலை நிர்ணயம் செய்யபடுவதாகவும், இதையெல்லாம் கண்டித்து, அடுத்த கட்டப் போராட்டம் குறித்து ஏற்காட்டில் வரும் 5 மற்றும் 6ம் தேதிகளில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும். விரைவில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளோம்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க