பாறைக்கு அடியில் சிக்கிய ஜே.சி.பி. ஆப்பரேட்டர் ..!11 மணி நேர போராட்டத்துக்குபின் மீட்பு!

மண் அகற்றும்போது ஏற்பட்ட விபத்தில் பாறைக்கு அடியில் சிக்கிய ஜே.சி.பி. ஆப்பரேட்டர் 11 மணிநேர முயற்சிக்குபின் உயிருடன் மீட்கப்பட்டார்.

ண் அகற்றும்போது ஏற்பட்ட விபத்தில் பாறைக்கு அடியில் சிக்கிய ஜே.சி.பி. ஆப்பரேட்டர் 11 மணிநேர முயற்சிக்குபின் உயிருடன் மீட்கப்பட்டார்.

பாறைக்கு அடியில் சிக்கிய ஜே.சி.பி. ஆப்பரேட்டர்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல பகுதிகளில் பாறைகள் உடைக்கப்பட்டு கல், ஜல்லி, எம் சாண்ட் உள்ளிட்டவை எடுக்கப்பட்டுவருகின்றன. மார்த்தாண்டத்தை அடுத்த திக்குறிச்சி பகுதியில் பாதி மண்ணுக்குள் புதைந்து இருந்த பாறையை உடைப்பதற்கு ஏதுவாக மண்ணை அகற்றும் பணி நேற்று காலையில் நடந்தது. ஜே.சி.பி மூலம் மண் அகற்றப்பட்டபோது திடீரென பாறை உருண்டு ஜே.சி.பி மீது விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் ஜே.சி.பி. ஆப்பரேட்டர் பிஜூமோன் பாறைக்கு அடியில் சிக்கிக்கொண்டார். 

சுமார் 2 ஆயிரம் டன் எடைகொண்ட பாறைக்கு அடியில் சிக்கிய பிஜூமோனை மீட்க நேற்று காலை 10  மணி முதல் தீயணைப்பு வீரர்களும், பொதுமக்களும் முயற்சித்தனர். அவரை நேற்று இரவு 10 மணியளவில்தான் உயிரோடு மீட்க முடிந்தது. பிஜூமோனின் கால்கள் பாறைக்கு அடியில் சிக்கிக்கொண்டதால் மயங்கிய நிலையில் காணப்பட்ட அவர் ஆசாரிப்பள்ளம் அரசு மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்கப்பட்டார். மண்ணை அகற்றியபோது ஏற்பட்ட விபத்தில் பாறைக்கு அடியில் ஜே.சி.பி. ஆப்பரேட்டேர் சிக்கிய சம்பவத்தால் மார்த்தாண்டம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!