ஆக்ஸ்போர்டில் படிப்பு..தெருவோரத்தில் வாழ்க்கை! உதவிய ஃபேஸ்புக்

கெட்டாலும் மேன் மக்கள் மேன்மக்களே

ஆக்ஸ்போர்டில் படிப்பு..தெருவோரத்தில் வாழ்க்கை!  உதவிய ஃபேஸ்புக்

க்ஸ்போர்டில் படித்து பட்டம் பெற்ற முதியவர் டெல்லியில் தெருவோரத்தில் வாழ்க்கை நடத்தி வந்தார். ஃபேஸ்புக் பதிவால் நல்ல மனம் படைத்தவர்கள் அவருக்கு குடியிருக்க வீடு ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர். 

ஆக்ஸ்போர்டில் பட்டம் பெற்ற ராஜாசிங்குக்கு உதவிய ஃபேஸ்புக்

டெல்லியின் கேன்னாட் ப்ளேஸ் பகுதியில் ராஜா சிங் என்ற 76 வயது முதியவர் தெருவோரத்தில் வாழ்ந்தார். ராஜாசிங் சாதாரண ஆள் இல்லை. இங்கிலாந்தின் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலையில் பட்டம் பெற்றவர். வெளிநாட்டில் நல்ல பணியில் இருந்து பணம் சம்பாதித்தவர். இரு மகன்கள் உண்டு. மகன்களை நன்கு படிக்க வைத்து, வெளிநாட்டில் வேலையும் வாங்கிக் கொடுத்தார். வெளிநாட்டு பெண்களை மணந்து கொண்டு ஒரு மகன் இங்கிலாந்திலும் மற்றோரு மகன் அமெரிக்காவிலும் செட்டிலாகி விட்டனர். பெற்ற தந்தையை மட்டும் மறந்தும் விட்டனர்.

விதி யாரை விட்டது. சகோதரர் வற்புறுத்தலால் இந்தியாவுக்கு வந்த ராஜா சிங், இங்கிலாந்தில் சம்பாதித்த பணத்தை தொழில்களில் முதலீடு செய்தார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு பணத்தை இழந்தார். பின்னர், வாழ்வாதாரத்துக்காக டெல்லியில் உள்ள தூதரகங்களில் விண்ணப்பங்கள் எழுதி கொடுக்கும் பணியை செய்தார். அதில், கிடைத்த சொற்ப பணத்தை கொண்டு வாழ்ந்து வந்த ராஜாசிங், கேன்னாட் ப்ளேஸ் பகுதியில் உள்ள பொதுக்கழிப்பறையில் குளிப்பார். ஒரே ஒரு சட்டைதான் வைத்துள்ளார். அதை துவைத்து காய்ந்ததும் அதையே மீண்டும் உடுத்திக் கொள்வார்.  இரவு நேரத்தில் பிளாட்பாரத்தில் உறங்குவார். ராஜாசிங்கின் கதையை கேட்டறிந்த அவினாஷ் சிங் என்பவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டார். 

இதைlத்டர்ந்து ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்கள் நிதி திரட்டி, டெல்லியில் குருநானக் சுக்லா என்ற இடத்தில் வீடு பார்த்து ராஜாசிங்கை தங்க வைத்துள்ளனர்.  தற்போது, புதிய வீட்டில் குடியேறியுள்ள ராஜா சிங், தொடர்ந்து தூதரக அலுவலகங்களில் விண்ணப்பங்களை நிரப்பி கொடுக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார். 

கை, காலில் பலம் உள்ளவரை உழைத்து சாப்பிடுவேன். பிச்சை எடுக்கும் நிலைக்கு கடவுள் என்னை தள்ளமாட்டார்' என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் ராஜாசிங். சீக்கிய சமுதாயத்தைச் சேர்ந்த அவரிடம், 'குருத்வாராக்களுக்கு சென்று லாந்தரில் இலவசமாக சாப்பிடலாமே' என்றால், '' எனக்கான உணவை நான் சம்பாதித்து சாப்பிட வேண்டும். நான் சம்பாதித்து லாந்தரில் ஏழை மக்களுக்கு உணவு வழங்க நன்கொடை அளிக்க வேண்டும். துரதிருஷ்டவமாக என்னிடம் பணம் இல்லை. நன்கொடை அளிக்க முடியாத எனக்கு அங்கு சென்று சாப்பிடவும்  உரிமை இலலை'' என்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!