தொடர்ந்து மாநில அரசு நிகழ்ச்சிகளை புறக்கணித்து வரும் அ.தி.மு.க எம்பி, எம்.எல்.ஏ-க்கள்? | Clash between Cuddalore ADMK cadres

வெளியிடப்பட்ட நேரம்: 12:16 (29/04/2018)

கடைசி தொடர்பு:07:16 (30/04/2018)

தொடர்ந்து மாநில அரசு நிகழ்ச்சிகளை புறக்கணித்து வரும் அ.தி.மு.க எம்பி, எம்.எல்.ஏ-க்கள்?

எம்பி அருண்மொழித்தேவன் தலைமையிலான இந்த அணியினர் மாவட்ட அமைச்சர் எம்சி சம்பத் கலந்துகொள்ளும் அரசு நிகழ்சிகள் ஏதிலும் கலந்துகொள்வது இல்லை, தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர்.

கடலூர்

கடலூர் மாவட்டத்தில் அ.தி.மு.க-வினர் இடையே இலைமறைவு, காய்மறைவாக இருந்த கோஷ்டி பூசல், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு வெட்ட வெளிச்சமாகியுள்ளது.  

கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும், தமிழக தொழில் துறை அமைச்சருமான எம்.சி. சம்பத்திற்கு எதிராக கடலூர் கடலூர் தொகுதி எம்.பி அருண்மொழித்தேவன் தலைமையில் சிதம்பரம் எம்.எல்.ஏ பாண்டியன், பண்ருட்டி சத்யாபன்னீர்செல்வம், காட்டுமன்னார்கோயில் முருகுமாறன் ஆகியோர்  செயல்பட்டு வருகின்றனர். 

எம்.பி அருண்மொழித்தேவன் தலைமையிலான இந்த அணியினர்  மாவட்ட அமைச்சர் எம்சி சம்பத் கலந்துகொள்ளும் அரசு நிகழ்ச்சிகள் ஏதிலும் கலந்துகொள்வது இல்லை, தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர். மத்திய அரசு நிகழ்ச்சியாக இருந்தால் கலந்துகொள்கின்றனர். ஆனால் மாநில அரசு நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்வது இல்லை. 

கடலூரில் இரவு தமிழக அரசின் செய்தி மற்றும் விளம்பர துறை சார்பில் அரசு பொருட்காட்சி துவக்க விழா நடந்தது. தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி சம்பத் தலைமை தாங்கினார். தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜ் பொருட்காட்சியைத் துவங்கிவைத்தார். விழாவிற்கு கடலூர் மாவட்ட எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது.

ஆனால் வழக்கம் போல் கடலூர் எம்.பி அருண்மொழித்தேவன், சிதம்பரம் எம்.பி சந்திரகாசி, சிதம்பரம் எம்.எல்.ஏ பாண்டியன், பண்ருட்டி எம்.எல்.ஏ சத்தியாபன்னீர்செல்வம், காட்டுமன்னார்கோயில் முருகுமாறன் ஆகியோர் புறக்கணித்தனர். 

எம்.பி அருண்மொழித்தேவன் தலைமையிலான எம்.பி, எம்.எல்.ஏ-க்கள், மாவட்ட அமைச்சர் கலந்துகொள்ளும் அரசு விழாக்கள், மாவட்ட கலெக்டர் நடத்தும் ஆய்வுக் கூட்டங்கள் என எதிலும் கலந்துகொள்ளாமல் இருப்பது தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 


[X] Close

[X] Close