மூன்றாவது அணி அமையுமா? கருணாநிதியைச் சந்தித்த தெலங்கானா முதல்வர்!

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், தி.மு.க. தலைவர் கருணாநிதியை இன்று சென்னையில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார். 

கருணாநிதியுடன் சந்திப்பு

தேசிய அளவில் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக மூன்றாவது அணியை அமைக்கும் பணியில் தெலங்கனா மாநில முதலமைச்சரும், தெலங்கானா ரஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவருமான சந்திரசேகர ராவ் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக மேற்குவங்க முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜியைச் சந்தித்து அவர் ஆலோசனை நடத்தியிருந்தார். இந்தநிலையில், இன்று சென்னை வந்த சந்திரசேகர ராவ், கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்களான, டி.ஆர்.பாலு மற்றும் ஆ.ராசா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

கருணாநிதியைச் சந்தித்த பின்னர், சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள ஸ்டாலினின் வீட்டிற்குச் சென்ற சந்திரசேகர ராவ், மூன்றாவது அணி குறித்து தி.மு.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், ஸ்டாலின் உள்ளிட்டோருடன் அமர்ந்து அவர் மதிய உணவை எடுத்துக் கொண்டார். முன்னதாக, சந்திரசேகர ராவுக்கு, ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், சபரீசன் உள்ளிட்டோர் சால்வை அணிவித்தும், மலர்க்கொத்து கொடுத்தும் வரவேற்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!