வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (29/04/2018)

கடைசி தொடர்பு:16:00 (29/04/2018)

வழக்கறிஞர் முருகனுக்கு ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற கிளை உத்தரவு!

மாவோயிஸ்டு என்ற குற்றச்சாட்டில்  கைது செய்யப்பட்டு கடந்த  ஒரு வருடத்துக்கும் மேலாகச்  சிறையிலிருக்கும் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முருகனுக்கு ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 

உயர் நீதிமன்றம்


இதுகுறித்து முருகனுக்காக சட்டப் போராட்டம் நடத்தி வந்த வழக்கறிஞர்கள் கூறும்போது, ''வழக்கறிஞர்கள் மற்றும் தோழர்கள், ஜனநாயக சக்திகளின் கூட்டு உழைப்பிற்குக் கிடைத்த வெற்றி இது. வழக்கறிஞர் முருகன், மாவோயிஸ்டுகள் எனக் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்காக வழக்கு நடத்தியதால், பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு 475 நாட்களாக திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். 

இதற்காக கண்டனக் கூட்டங்களையும், தொடர்ந்து சட்ட போராட்டமும் நடத்தி வந்தோம். மதுரை உயர் நீதிமன்ற கிளை தற்போது ஜாமீன் வழங்கியுள்ளது. இது ஒரு வெற்றிதான் என்றாலும்,  இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு, புனையப்பட்ட மற்றொரு பொய்வழக்கான தர்மபுரி வழக்கில்  ஜாமீன்  மனு, கடந்த ஆறு மாதங்களாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதிலும் ஜாமீன் கிடைத்தால்தான் வழக்கறிஞர் முருகன் வெளியில் வர முடியும்'' என்றனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க