11 மணிநேரப் போராட்டத்துக்கு பின் மீட்கப்பட்ட ஜே.சி.பி. ஆப்பரேட்டர் மரணம்! | JCP Operator died after accident

வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (29/04/2018)

கடைசி தொடர்பு:16:30 (29/04/2018)

11 மணிநேரப் போராட்டத்துக்கு பின் மீட்கப்பட்ட ஜே.சி.பி. ஆப்பரேட்டர் மரணம்!

மண் அகற்றும்போது ஏற்பட்ட விபத்தில் பாறைக்கு அடியில் சிக்கியதால் 11 மணிநேரத்துக்குப்பின் மீட்கப்பட்ட ஜே.சி.பி. ஆப்பரேட்டர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

ண் அகற்றும்போது ஏற்பட்ட விபத்தில் பாறைக்கு அடியில் சிக்கியதால் 11 மணிநேரத்துக்குப்பின் மீட்கப்பட்ட ஜே.சி.பி. ஆப்பரேட்டர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஜே.சி.பி. ஆப்பரேட்டர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாறைகள் உடைக்கப்பட்டு கல், ஜல்லி, எம் சாண்ட் உள்ளிட்டவை எடுக்கப்பட்டுவருகின்றன. மார்த்தாண்டத்தை அடுத்த திக்குறிச்சி பகுதியில் மண்ணுக்குள் புதைந்து இருந்த பாறையை உடைப்பதற்கு ஏதுவாக மண்ணை அகற்றும் பணி நேற்று காலை நடந்த்து. ஜே.சி.பி. மூலம் மண் அகற்றிக்கொண்டிருந்தபோது திடீரென பாறை உருண்டு ஜே.சி.பி. மீது விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் ஜே.சி.பி. ஆப்பரேட்டர் பிஜூமோன் பாறைக்கு அடியில் சிக்கிக்கொண்டார்.  சுமார் 2 ஆயிரம் டன் எடைகொண்ட பாறைக்கு அடியில் சிக்கிய பிஜூமோன் நேற்று காலை முதல் இரவுவரை 11 மணி நேர போராட்டத்துக்கு பின்  மீட்கப்பட்டார்.

 11 மணி நேர போராட்டத்துக்கு பின்  மீட்கப்பட்டார்

பிஜூமோனின் கால்கள் பாறைக்கு அடியில் சிக்கிக்கொண்டதால் மயங்கிய நிலையில் காணப்பட்ட அவர் ஆசாரிப்பள்ளம் அரசு மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். சிகிச்சைபெற்றுவந்த ஜே.சி.பி. ஆப்பரேட்டர் பிஜூமோன் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குமரி மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.