வெளியிடப்பட்ட நேரம்: 01:30 (30/04/2018)

கடைசி தொடர்பு:01:30 (30/04/2018)

'ரோட்டோர நீரூற்று மட்டுமே குடிநீர் ஆதாரம்' - தவிக்கும் நீலகிரி மக்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூர், இந்திரா நகர் மற்றும் காந்தி நகர்ப் பகுதி மக்களுக்கு ரோட்டோரத்தில் உள்ள நீரூற்று மட்டுமே குடிநீர் ஆதாரமாக உள்ளதால், நகராட்சி நிர்வாகம் முறையாக குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். 

நீலகிரி மாவட்டம் குன்னூர், இந்திரா நகர் மற்றும் காந்தி நகர்ப் பகுதி மக்களுக்கு ரோட்டோரத்தில் உள்ள நீரூற்று மட்டுமே குடிநீர் ஆதாரமாக உள்ளதால், நகராட்சி நிர்வாகம் முறையாக குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இந்திரா நகர் மற்றும் காந்தி நகர்ப் பகுதியில் சுமார் 400 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பெரும்பாலானோர் தினக்கூலியாக வேலை செய்கின்றனர். மிகவும் பின்தங்கிய நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு குன்னூர் நகராட்சி சார்பில் மாதம் ஒரு முறை மட்டுமே விநியோகம் செய்யப்படும் குடிநீரும் சில மணி நேரத்திற்கு மட்டுமே கிடைப்பதாக தெரிவிக்கின்றனர். குடிநீர்

இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த சுதா கூறுகையில், “ஒரு நாளைக்கு சுமார் 10 முதல் 15 குடம் தண்ணீர் எங்கள் வீட்டிற்குத் தேவைப்படுகிறது. தண்ணீர் முறையாகக் கிடைப்பதில்லை. எனவே, தண்ணீருக்காக அரைநாள் விடுப்பு எடுத்து தண்ணீர் சுமக்க வேண்டியுள்ளது. அல்லது பணி முடிந்து வந்து மாலை தண்ணீர் சுமக்க வேண்டியுள்ளது. மலைப் பகுதியில் இருந்து வரும் நீரூற்று,  ஊட்டி - குன்னூர் தேசிய நெடுஞ்சாலை என ரோட்டோரத்தில் குட்டையில் தேங்கி நிற்கும் தண்ணீரை எடுத்து பயன்படுத்திக் கொள்கிறோம். 

சீசன் துவங்கியுள்ள நிலையில், வாகன போக்குவரத்து அதிகம் இருப்பதால், மிகுந்த பயத்துடனும், எச்சரிக்கையுடனும் தண்ணீர் எடுத்து வருகிறோம். கோடைக்காலம் துவங்கினால், கடும் குடிநீர் பஞ்சம் ஏற்படும். அச்சமயத்தில் மலைப்பகுதியில் இருந்து வரும் நீரூற்று வற்றிக் குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே குட்டைக்கு வரும். அதை, காலை முதல் மாலை வரை நீண்ட வரிசையில் காத்திருந்து எடுக்க வேண்டியிருக்கும். சில சமயங்களில் வீட்டில் உள்ள சிறுவர்களை பள்ளிக்கு அனுப்பாமல், அவர்களையும் தண்ணீர் எடுத்து வர உதவிக்கு அழைத்துச் செல்வோம்.

நீரூற்று வற்றி விட்டால், மலைக்குக் கீழ் பகுதியில் ஒரு நீரூற்று உள்ளது. அதில் குப்பையும், சேறும் கலந்திருக்கும். அதில் இருந்து தண்ணீரை எடுத்து வந்து வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்திக் கொள்வோம். அச்சமயத்தில் அதிக விலை கொடுத்து குடிநீர் வாங்கிப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படும். விலை கொடுத்து குடிநீர் வாங்கிப் பயன்படுத்தும் அளவுக்கு இப்பகுதியில் யாரும் வசதி படைத்தவர்கள் இல்லை. குன்னூர் நகராட்சி இப்பகுதியினருக்குக் குறைந்த பட்சம் 3 நாட்களுக்கு ஒரு முறையாவது தண்ணீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க