'தினகரன், திவாகரன் காணாமல் போவார்கள்' - முதல்வர் எடப்பாடி பழனிசாமி! | edappadi palanisamy slams dinakran and divakaran

வெளியிடப்பட்ட நேரம்: 23:32 (29/04/2018)

கடைசி தொடர்பு:23:51 (30/04/2018)

'தினகரன், திவாகரன் காணாமல் போவார்கள்' - முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

எடப்பாடி பழனிசாமி

தினகரனுடனான மோதலில் தனி அணி உருவாக்கியிருக்கும் திவாகரன்  இப்போது எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பி.எஸுக்கும் ஆதரவான நிலைப்பாட்டில் பேசி வருகிறார். இதன் பின்னணியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாகவும் அவருடைய தூண்டுதலின் பேரிலேயே திவாகரன், தினகரனை எதிர்ப்பதாகவும் பரவலாக பேசப்பட்டு வந்தது.  இந்தச் சூழலில் தினகரன், திவாகரன் இருவருடைய அணிகளுமே காணாமல் போய்விடும் என்று கோவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இன்று கோவை விமானநிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “ஸ்டாலினுக்கும் தெலங்கானா முதல்வருக்கும் என்ன பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது என்று எனக்குத் தெரியாது. அவர்கள்  என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று எங்களுக்கு எப்படித் தெரியும். திவாகரன் தனி அணி என்று தான் அறிவித்திருக்கிறார். அவர் நடைமுறைக்கு வருகிறாரா என்று பார்க்கலாம். கட்சி ஆரம்பித்து எவ்வளவு நாளாச்சு அதுக்குள்ளேயே அவர்களுக்குள்  பிளவு ஏற்பட்டுவிட்டது. இரண்டுமே நிக்காது. தனி அணி ஆரம்பிச்சாங்க மக்கள் மத்தியில் எடுபடலை. விரைவில் இருவருடைய அணிகளுமே காணாமல் போய்விடும். எஸ்.வி.சேகர் மீது அரசு வழக்குப் பதிவு செய்திருக்கிறது. யாராக இருந்தாலும் தவறு செய்திருந்தால் உரிய நடவடிக்கை எடுப்போம். கர்நாடகத்தில் பல வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கவில்லை என்பதற்கு தலைமைக்கழகம்தான் காரணம் என்பது தவறான தகவல். ஒரு சிலருக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்திருக்கிறது. அங்கே நாம் அங்கீகரிக்கப்பட்ட கட்சி இல்லை என்பதால் கிடைக்கவில்லை. ஒவ்வொரு காலகட்டத்திலும் அது மாறிக்கொண்டே இருக்கும். தமிழகத்திலும், பாண்டிச்சேரியிலும் அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்பதால் எங்களுக்கு ஒதுக்கிவிடுவார்கள்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க