ஜம்மு- காஷ்மீர் துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நிர்மல் சிங்!

ஜம்மு- காஷ்மீர் துணை முதல்வர் பதவியை நிர்மல் சிங் ராஜினாமா செய்துள்ளார். புதிய துணை முதல்வராக கவிந்தர் குப்தாவை பா.ஜ.க அறிவித்துள்ளது.

ஜம்மு- காஷ்மீர் துணை முதல்வர் பதவியை நிர்மல் சிங் ராஜினாமா செய்துள்ளார். புதிய துணை முதல்வராக, கவிந்தர் குப்தாவை பா.ஜ.க அறிவித்துள்ளது.

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில், மக்கள் ஜனநாயகக் கட்சியும் பா.ஜ.க-வும் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்திவருகின்றன. காஷ்மீர் கத்துவா மாவட்டத்தில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டார்.  நாட்டையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்தச் சம்பவத்துக்கு எதிராகவும், இதில் ஈடுபட்ட குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் என்பதற்காகவும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.

நிர்மல் சிங்

இதில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு ஆதரவு தெரிவித்து, காஷ்மீரில் பேரணி நடைபெற்றது. அந்தப் பேரணியில், பா.ஜ.க-வைச் சேர்ந்த வனத்துறை அமைச்சர் சௌத்ரி லகால் சிங், வர்த்தகத்துறை அமைச்சர் சந்தர் பிரகாஷ் சிங் ஆகியோர் கலந்துகொண்டனர். பின்னர், அவர்கள் இருவரும் தங்களது பதவியை ராஜினாமாசெய்தனர்.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் அமைச்சரவை வரும் 30-ம் தேதி மாற்றி அமைக்கப்பட உள்ளது என துணை முதல்வர் நிர்மல் சிங் கூறியிருந்தார். நேற்று இவர், திடீரெனத் தனது பதவியை ராஜினாமாசெய்துள்ளார். புதிய துணை முதல்வராக பா.ஜ.க-வைச் சேர்ந்த கவிந்தர் குப்தா தேர்வுசெய்யப்பட்டுள்ளார். இவர், ஜம்மு- காஷ்மீர் சட்டசபையின் சபாநாயகராக இருந்தவர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!