சின்னமனூர் சிவகாமியம்மன் கோயில் தேர்த் திருவிழா - திரளாக வந்து பக்தர்கள் பங்கேற்பு!

சின்னமனூர் சிவகாமியம்மன் - பூலாநந்தீஸ்வரர் திருக்கோவிலில் சென்ற வார வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் சித்திரைத் திருவிழா துவங்கியது. கடந்த வெள்ளிக்கிழமை திருக்கல்யாணம் நடைபெற்றது, அதனைத் தொடர்ந்து நேற்று தேரோட்டம் தொடங்கியது.

தேரோட்டம்

தேனி மாவட்டம் சின்னமனூர் சிவகாமியம்மன் - பூலாநந்தீஸ்வரர் திருக்கோயிலில், சென்ற 20-ம் தேதி, கொடியேற்றத்துடன் சித்திரைத் திருவிழா தொடங்கியது. கடந்த வெள்ளிக்கிழமை திருக்கல்யாணம் நடைபெற்றது, அதைத் தொடர்ந்து, நேற்று தேரோட்டம் தொடங்கியது. தேரோட்டம், நேற்று முன்தினமும் நேற்றும் விமரிசையாக நடைபெற்றது. நேற்று முன்தினம் (28.4.18) தேர், நிலையில் இருந்து கிளம்பி, ரத வீதி வழியாக சின்னமனூரின் முக்கிய இடமான கண்ணாடிக் கடை முக்கில் நிறுத்தப்பட்டது. நேற்று (29.4.18) காலையிலிருந்து பக்தர்களின் தரிசனம் மற்றும் அபிஷேகங்களுக்குப் பிறகு, மாலை 5 மணியளவில் கிளம்பி திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலை வழியாக மீண்டும் தேர்நிலையை வந்தடைந்தது. சுமார் 30 அடி வரை அலங்காரம் செய்யப்பட்டிருந்த தேரைக் காணவும், சாமி தரிசனத்துக்காகவும், ஆயிரக்கணக்கான மக்கள் தேசிய நெடுஞ்சாலையில் காத்திருந்தனர். அப்போது, பக்தர்கள் திரளாக வந்து தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேரோட்டத்தையொட்டி, தேசிய நெடுஞ்சாலையில் சில மணி நேரம் வாகனங்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டன. போடி டி.எஸ்.பி., பிரபாகரன் தலைமையில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!