வெளியிடப்பட்ட நேரம்: 12:16 (30/04/2018)

கடைசி தொடர்பு:12:36 (30/04/2018)

கள்ளழகர் திருக்கோலத்தில் பரமக்குடி வைகை ஆற்றில் இறங்கிய சுந்தரராஜ பெருமாள்!

அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் பரமக்குடி வைகை ஆற்றில் இறங்கிய விழா விமர்சையாக நடைபெற்றது. இவ்விழாவில் ஆயிரகணக்கான பக்தர்கள் திரண்டு அழகரை வரவேற்றனர்.

அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் பரமக்குடி வைகை ஆற்றில் இறங்கிய விழா விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு அழகரை வரவேற்றனர்.

கள்ளழகர் கோலத்தில் பரமக்குடி வைகை ஆற்றில் இறங்கிய சுந்தரராஜ பெருமாள்.

ஆண்டுதோறும் சித்திரைப் பெளர்ணமி நாளில் கள்ளழகர் ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. பெருமாள் கோயில் தலங்களில் எல்லாம் இவ்விழா சிறப்பாகக் கொண்டாடப்படும். இதையொட்டி பரமக்குடி அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாள்களின் இரவில் சுந்தர்ராஜ பெருமாள் ஆடி வீதிகளில் பல்லக்கில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பல்வேறு மண்டகப்படிகளில் தங்கி அருள் பாலித்த சுந்தர்ராஜ பெருமாள் இன்று காலை கள்ளழகர் கோலம் கொண்டு பரமக்குடி வைகை ஆற்றில் இறங்கினார்.

பச்சை பட்டாடை உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் கள்ளழகர் திருக்கோலத்தில் எழுந்தருளிய சுந்தரராஜ பெருமாளை பக்தர்கள் மஞ்சள் நீர் பீச்சியடித்து குளிர்ச்சியுடன் வரவேற்றனர். இதைத் தொடர்ந்து பரமக்குடி வைகை ஆற்றில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரைத் தரிசனம் செய்து வழிபட்டனர். ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்வுக்காக வைகை அணையிலிருந்து திறக்கப்பட்ட நீர் மதுரையுடன் நின்றுவிட்ட நிலையில் பரமக்குடி வைகை ஆற்று பகுதிக்கு வந்து சேரவில்லை. இதனால் நீர் இல்லா பரமக்குடி வைகை ஆற்றில் அழகர் இறங்கியது பக்தர்களின் மனதில் நெருடலை ஏற்படுத்தியது.