வைரலாகும் விஜய்யின் பைக் சீக்வென்ஸ் #விஜய்62 | Vijay new movie shooting scene goes viral in net

வெளியிடப்பட்ட நேரம்: 12:52 (30/04/2018)

கடைசி தொடர்பு:12:56 (30/04/2018)

வைரலாகும் விஜய்யின் பைக் சீக்வென்ஸ் #விஜய்62

'கத்தி', 'துப்பாக்கி' படங்களின் ஹிட்டுக்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் விஜய் கூட்டணியில் புதிய படம் ஒன்று உருவாகிவருகிறது. இவர்கள் கூட்டணியில் ரிலீஸான இரண்டு படங்களும் ஏற்கெனவே ஹிட் அடித்ததால்,  மூன்றாவது படத்தை விஜய் ரசிகர்கள் ஆவலோடு எதிர்நோக்கி இருக்கின்றனர். இந்நிலையில், 'விஜய் 62 ' படத்தை  சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. விஜய்-க்கு ஜோடியாக, இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.  இந்நிலையில், தற்போது இந்தப் படம்பற்றிய வைரல் வீடியோ ஒன்று இணையத்தில் பரவிவருகிறது. 

விஜய்

சினிமா ஸ்டிரைக் முடிந்திருக்கும் நிலையில், 'விஜய் 62' படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடந்துவருகிறது. படம்குறித்த ஃபர்ஸ்ட் லுக் மற்றும் படத்தின் பெயர் எதுவும் இன்னும் வெளிவராத நிலையில், இந்த வீடியோ விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சென்னையில், இரவு நேரத்தில் மோட்டார் பைக்கை வேகமாக ஓட்டிச் செல்கிறார் விஜய். அப்போது, அவரை அடையாளம் கண்டுகொண்ட அவரின் ரசிகர்கள்,  அவரைப் பின்தொடர்ந்து  பைக்கில் வேகமாகச் செல்கின்றனர். வெறும் 45 செகண்ட்ஸ் மட்டுமே ஓடும் இந்த வீடியோ, இணையத்தில் வைரலாகிவருகிறது. 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க