அண்ணாமலை பல்கலைக்கழக மாணவிக்கு நடுரோட்டில் நடந்த விபரீதம்! இன்ஜினீயர் வெறிச்செயல் | Engineer tried to kill a Chidambaram College student

வெளியிடப்பட்ட நேரம்: 14:54 (30/04/2018)

கடைசி தொடர்பு:15:40 (30/04/2018)

அண்ணாமலை பல்கலைக்கழக மாணவிக்கு நடுரோட்டில் நடந்த விபரீதம்! இன்ஜினீயர் வெறிச்செயல்

மாணவி லாவண்யா கூச்சல் போட்டுள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அங்கு நின்றிருந்த ஆட்டோ ஓட்டுனர்கள், பொது மக்கள் கற்கலால் வாலிபரை சரமாரியாக தாக்கியுள்ளனர். உடன் அந்த வாலிபர் தப்பி ஓடியுள்ளார்

தன்னுடன் பேச மறுத்த காதலியை நடுரோட்டில் வைத்து காதலன் கழுத்தை அறுத்த அதிர்ச்சி சம்பவம் சிதம்பரத்தில் நடந்துள்ளது.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலை வேளாண்மை படித்து வருபவர் லாவண்யா. இவர் வேலூர்
மாவட்டம், கதம்மம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர். சிதம்பரம் பல்கலைக்கழக தாமரை விடுதியில் தங்கி படித்து வருகிறார். 
இந்நிலையில், இன்று காலை லாவண்யா விடுதியில் இருந்து வெளியே வந்துள்ளார். அப்பொழுது அங்கு நின்றிருந்த வாலிபர் ஒருவர்
லாண்யாவை கல்லால் தாக்கி அவர் கீழே விழுந்தவுடன் கையில் வைத்திருந்த கத்தியால் கழுத்தை அறுத்துள்ளார். உடனே மாணவி லாவண்யா  கூச்சல் போட்டுள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அங்கு நின்றிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள், பொதுமக்கள் கற்களால் வாலிபரை சரமாரியாக தாக்கியுள்ளனர். உடன் அந்த வாலிபர் தப்பி ஓடியுள்ளார்.  அங்கு இருந்தவர்கள் அவரைப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் வாலிபரை அண்ணாமலை நகர் போலீஸாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த மாணவி லாண்யாவை மீட்ட காவல்துறையினர், அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பிடிபட்ட வாலிபரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், லாவண்யாவை தாக்கியவர் நவீன்குமார் என்று தெரியவந்துள்ளது. மாணவியின் ஊரைச் சேர்ந்த இவர், இன்ஜினீயரிங் பட்டதாரி. சென்னையில் உள்ள தனியார்  நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இருவரும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதால் கடந்த 5 ஆண்டுகளாக இருவரும்  காதலித்து  வந்துள்ளனர். இருவருக்கும் தகராறு ஏற்பட்டு கடந்த 20 நாள்களாக லாவண்யா, நவீன்குமாரின் போனை எடுக்கவில்லை. மேலும், அவரை தவிர்த்து வந்துள்ளார். இதனால் இன்று கல்லூரிக்கு நேரில் வந்த நவீன்குமார்,  லாவண்யாவிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். அப்போது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த நவீன்குமார், மாணவியைக் கல்லால் தாக்கி, கத்தியால் கழுத்தை அறுத்துள்ளார்'' என்பது தெரியவந்துள்ளது.

பொதுமக்கள் கல்லால் அடித்ததில் தலையில் பலத்த காயமடைந்த நவீன்குமார் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கல்லூரி மாணவியை கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் சிதம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.