வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (30/04/2018)

கடைசி தொடர்பு:17:40 (30/04/2018)

உலகக் கோப்பை வாள்வீச்சுப் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை பவானி தேவி!

ஐஸ்லாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை சாட்டிலைட் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை சி.ஏ பவானி தேவி ( 28 வயது) வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்

ஐஸ்லாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை சாட்டிலைட் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை சி.ஏ பவானி தேவி (28) வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

பவானிதேவி

ஐஸ்லாந்தின் ரேக்ஜாவிக் நகரில் 2018-ம் ஆண்டுக்கான உலகக் கோப்பை வாள்வீச்சுப் போட்டி நடைபெற்றது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த பவானி தேவி இந்தியாவின் சார்பாக விளையாடினார். கால் இறுதிப்போட்டியில் பரேட் டாரஸையும் வென்றதன் மூலமாக, அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார். அரையிறுதிப் போட்டியில் இத்தாலி வீராங்கனை குய்லா அர்பினோவையுடன் மோதினார். இதில் குய்லா அர்பினோவையை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு நுழைந்தார்.

இதையடுத்து நேற்று நடந்த சப்ரே இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை பவானிதேவியும் அமெரிக்காவின் அலெக்ஸில் பிரவுனும் மோதினர். இதில் அலெக்ஸில் பிரவுன் 15 - 10 என்ற கணக்கில் பவானிதேவியை வீழ்த்தி தங்கம் வென்றார். இதனால் இந்தியாவுக்கு வெள்ளி கிடைத்தது. சென்ற வருடம் நடந்த இதே வாள்வீச்சுப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். இவர் சென்னையைச் சேர்ந்தவர் என்பதில், தமிழகத்துக்குக் கூடுதல் பெருமிதம்.