வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (30/04/2018)

கடைசி தொடர்பு:17:50 (30/04/2018)

ஸ்டாலின் சந்திப்பின்போது, சந்திரசேகர் ராவ் கையில் சிவப்புப் பட்டை அணிந்தது ஏன்?

சநதிரசேகர ராவுக்கு ஸ்டாலின் தடபுடல் விருந்து அளித்தார்.

ஸ்டாலின் சந்திப்பின்போது, சந்திரசேகர் ராவ் கையில் சிவப்புப் பட்டை அணிந்தது ஏன்?

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் நேற்று சென்னையில் தி.மு.க தலைவர் கருணாநிதியைச் சந்தித்து நலம் விசாரித்தார். செயல் தலைவர் மு.க. ஸ்டாலினையும் சந்தித்தார். 15 ஆண்டுகளுக்குப் பிறகு, கருணாநிதியைச் சந்திக்க வந்த சந்திரசேகர ராவுக்கு ஸ்டாலின் 'தட புடல்' மதிய  விருந்தளித்தார். தலைவாழையில் மட்டன் பிரியாணி, நாட்டுக்கோழி - 65 , மட்டன் சுக்கா ஆகியவற்றுடன் வஞ்ரம் மீன் பரிமாறப்பட்டது. ஸ்டாலின் தன் கையால் சந்திரசேகர ராவுக்கு விருந்து பரிமாற அவர் ருசித்து சாப்பிட்டார். விருந்தில் முன்னாள் அமைச்சர்கள் ஆ.ராசா, டி.ஆர் பாலு உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். உதயநிதி ஸ்டாலினும் விருந்து நடைபெற்ற ஹாலில் இருந்தார்.

சந்திரசேகர ராவுக்கு விருந்து

தெலங்கானா மாநிலம் உதிக்க சந்திரசேகர ராவ் நடத்திய தொடர் போராட்டமே முக்கிய காரணம். அதனால், தெலங்கானாவில் உள்ள இமாமின் ஷாமின் என்ற தர்க்காவில் 'தெலங்கானா உருவாகப் போராடியவர் ' என்பதை குறிக்கும் வகையில், அவருக்கு உருதில் எழுதப்பட்ட சிவப்புப் பட்டை விருதாக வழங்கப்பட்டது. கருணாநிதி, ஸ்டாலின் உடனான சந்திப்பின்போது, தன் வலது கையில் சந்திரசேகர ராவ் இந்தப் பட்டையை அணிந்திருந்தார். முக்கிய நிகழ்வுகளின்போது, இந்தப் பட்டையைத் தன் கையில் சந்திரசேகர ராவ் அணிவது வழக்கம். 

''இந்திய ஜனநாயகத்தில் கருணாநிதி  மூத்த தலைவர். தென்னிந்தியா அவர் குறித்து பெருமை கொள்கிறது. ஸ்டாலின் என்னுடைய சகோதரர். நாட்டின் முன்னேற்றத்துக்கு ஸ்டாலினின் பங்களிப்பு தேவை'' என்று சந்திரசேகர ராவ் கூறினார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க