வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (30/04/2018)

கடைசி தொடர்பு:19:00 (30/04/2018)

கள்ளழகருக்கு முன்னால் அனைவரும் சமம் இல்லையா?- பக்தர்கள் கேள்வி

சித்திரைத்திருவிழாவின் உச்சமாகக் கள்ளழகர் இன்று காலை மதுரை வைகையாற்றில்

சித்திரைத் திருவிழாவின் உச்சமாகக் கள்ளழகர் இன்று காலை மதுரை வைகையாற்றில் எழுந்தருளிய விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்து உற்சாகமாகக் கள்ளழகரை வழிபட்டார்கள். கள்ளழகருக்காகப் பாதுகாப்புக் கெடுபிடிகளைப் பொறுத்துக்கொண்டு இரவு முழுவதும் உறங்காமல் குழந்தைகளை வைத்துக்கொண்டு, இயற்கை உபாதைகளைக் கண்டுகொள்ளாமல் கிடைத்த இடத்தில் பொதுமக்கள் கஷ்டப்பட்டு நின்று கொண்டிருக்க, அமைச்சர்கள், மாவட்ட அதிகாரிகள், ரொம்பப் பாதுகாப்பான இடங்களில் இருந்து கொண்டு கள்ளழகரை அருகிலிருந்து வழிபட்டதை பொதுமக்களும், ஆன்மிக அன்பர்களும் மனம் வெறுத்துப்போய் பேசினார்கள். 

செல்லூர் ராஜூ

''கடவுளுக்கு முன் அனைவரும் சமம் என்கிறோம். கடவுளும் அனைவரையும் அப்படித்தான் பார்க்கிறார். ஆனால், மதுரையில் நடைபெறும் ஒவ்வொரு முக்கியக் கோயில் விழாவிலும், அதிகாரிகள், ஆளும் கட்சியினருக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஏற்கெனவே மீனாட்சியம்மன் கோயிலில் நடந்த திருக்கல்யாணத்தில் ஏழை எளியவர்களைப் புறம் தள்ளிவிட்டார்கள். கள்ளழகர் திருவிழாவிலும் பொதுமக்களை வெகு தூரமாக வைத்து நல்ல வசதியான இடத்தில் அமைச்சர் செல்லூர்ராஜூ, ஆர்.பி.உதயகுமார் குடும்பத்தினர், எம்.எல்.ஏக்கள்,  முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன்,கலெக்டர் வீரராகவராவ் குடும்பம், போலீஸ் அதிகாரிகள் குடும்பம் நின்றுகொண்டு அழகர் இறங்கும் ஆற்று நீரில் பூ போட்டு பூஜை செய்தார்கள்.

கள்ளழகர்

அவர்கள் இருக்கும் பகுதிக்கு யாரும் போய்விடாத வகையில் காவல்துறையினர் தடுப்புகளைப் போட்டு பாதுகாத்தனர். இன்னும் மன்னராட்சி நடப்பதுபோலவே இருக்கிறது. மக்களுக்காகத்தானே விழா; அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் மட்டும்தான் விழாவா? இந்த நிலை எப்போது மாறும்'' என்றனர். ஆற்றுக்கு வரும் கள்ளழகரை வீரராகவப்பெருமாள் வரவேற்பார். அதேபோல் கலெக்டர் வீரராகவராவ், பட்டு வேட்டி கட்டி உற்சாகமாக நின்று கள்ளழகரை வணங்கினார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க