வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (30/04/2018)

கடைசி தொடர்பு:19:40 (30/04/2018)

'தொழிற்சாலைகளால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது' - தூத்துக்குடி கலெக்டர் தகவல்

துாத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கு தாமிரபரணியிலிருந்து, 5 எம்.ஜி.டி., அளவு தண்ணீரே வழங்கப்படுகிறது. இந்த கோடையில் தண்ணீர் தட்டுப்பாட்டை கட்டுபடுத்தும் முன்னேச்சரிக்கை நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்கிறது என, ஆட்சியர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்குத் தாமிரபரணியிலிருந்து, 5 எம்.ஜி.டி. அளவு தண்ணீரே வழங்கப்படுகிறது. இந்தக் கோடையில் தண்ணீர் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்கிறது என ஆட்சியர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

துாத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி 18 கிராம மக்கள், மாணவர்கள், பல்வேறு கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். உண்ணாவிரதம், ஆட்சியர் அலுவலக முற்றுகை எனத் தொடர் போராட்டம் நடத்தி வந்த மக்கள், தற்போது தாமிரபரணியிலிருந்து ஸ்டெர்லைட் ஆலைக்குத் தண்ணீர் வழங்கக் கூடாது எனக் கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று மக்கள் குறைதீர்க்கும் நாளில் இது குறித்து, மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அப்போது அவர் கூறுகையில், ”தாமிரபரணியிலிருந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் 20 எம்.ஜி.டி, திட்டத்தின் கீழ் தொழிற்சாலைகளுக்குத் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பருவமழை பெய்த காலத்திலேயே தொழிற்சாலைகளுக்கு, 9 எம்.ஜி.டி. அளவில்தான் தண்ணீர் வழங்கப்பட்டது. தற்போது 5 எம்.ஜி.டி-க்கும் குறைவாகத்தான்  தண்ணீர் வழங்கப்படுகிறது. அந்தப் பட்டியலிலும் நீங்கள் கேட்கும் ஸ்டெர்லைட் ஆலை இல்லை.  

தற்போது நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அணையில், 78 கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. அதனால் மாவட்டத்தில், தண்ணீர் தட்டுபாடு  ஏற்பட வாய்ப்பில்லை. இருப்பினும் ஒவ்வொரு வாரத்தின் தொடக்கத்திலும் முன்னுரிமை அடிப்படையில், தண்ணீர் தட்டுப்பாடு  ஏற்படும் பகுதிகள், தூர்வார வேண்டிய குளங்கள், டெங்கு பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம்.  ஸ்டெர்லைட் ஆலை தனது விரிவாக்கத்துக்கு, வனங்கள் மற்றும் சுற்றுச்சூழல்  மற்றும் பருவகாலமாற்றம் அமைச்சகத்திடம் அனுமதி வாங்கியிருக்கிறது. இந்த அனுமதியின் அடிப்படையில், தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம், ஆலையை நிறுவிக்கொள்ள அனுமதியும் (CTE)   பெற்றுள்ளனர். இந்த அடிப்படையில்தான் விரிவாக்கப் பணிகளை ஆலை நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்’’ என்றார்.   

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க