நிர்மலா தேவி விவகாரம்: முருகன், கருப்பசாமிக்கு 15 நாள்கள் நீதிமன்றக் காவல்!

நிர்மலாதேவி விவகாரத்தில் அவருக்கு நெருக்கமாக இருந்த உதவிப் பேராசிரியர் முருகன்

நிர்மலாதேவி விவகாரத்தில் அவருக்கு நெருக்கமாக இருந்த உதவிப் பேராசிரியர் முருகன் மற்றும் ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் 5 நாள்கள் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்குப் பின் இன்று சிறையில் அடைக்கப்பட்டார்கள். 

முருகன், கருப்பசாமி

அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளைத் தவறான வழியில் செல்வதற்கு கட்டாயப்படுத்திய வழக்கில் அக்கல்லூரி பேராசிரியர் நிர்மலாதேவி முதலில் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நீண்ட தேடலுக்குப் பின் உதவிப் பேராசிரியர் முருகனும் நீதிமன்றத்தில் சரணடைந்து கருப்பசாமியும் சி.பி.சி.ஐ.டி-யின் விசாரணைக்கு வந்தார்கள்.  கடந்த 5 நாள்களாக முருகனையும் கருப்பசாமியையும் விருதுநகர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் வைத்து விசாரித்து வந்தனர். மேலும், அவர்களது வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. கருப்பசாமியின் செல்போனை அவரது  நண்பரிடமிருந்து சி.பி.சி.ஐ.டி போலீஸார், கடந்த 29-ம் தேதி கைப்பற்றினர். இவர்களை விசாரணை செய்ததன் மூலம் இந்த வழக்கு அடுத்த கட்டத்துக்கு செல்லுமா என்று தெரியவில்லை. புத்தாக்க பயிற்சி மைய இயக்குநர் கலைச்செல்வனுக்குதான் அனைத்தும் தெரியும் என்று இவர்கள் தரப்பு கூறி வருகிறது. சி.பி.சி.ஐ.டி-யும்  எந்த தகவலையும் வெளியிடாமல் உள்ளனர். அவர்களிடம் விசாரணைக்குழு அதிகாரி சந்தானமும் விரைவில் விசாரணை செய்ய உள்ளார். இந்த நிலையில் இன்று இவர்கள் சாத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். சி.பி.சி.ஐ.டி காவல் முடிந்த நிலையில், அவர்களை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, அவர்கள்  மதுரை சிறைக்குக் கொண்டு வரப்பட்டனர். ஏற்கெனவே மதுரை பெண்கள் சிறையில் நிர்மலாதேவி இருக்கிறார். இந்த வழக்கில் அடுத்து என்னவென்பது சி.பி.சி.ஐ.டி எடுக்கும் அடுத்த கட்ட நடவடிக்கையில் தெரியும்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!