கத்துவா சம்பவம் தொடர்பான கவிந்தர் சர்ச்சை கருத்து - உமர் அப்துல்லா கடும் கண்டனம்!

சிறுமி பாலியல் வன்கொடுமை தொடர்பாக காஷ்மீர் துணை முதல்வர் கவிந்தர் குப்தா தெரிவித்த கருத்துக்கு முதல்வர் உமர் அப்துல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சிறுமி பாலியல் வன்கொடுமை தொடர்பாக காஷ்மீர் துணை முதல்வர் கவிந்தர் குப்தா தெரிவித்த கருத்துக்கு முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தொடர்பாக குற்றவாளிகளுக்கு ஆதரவு தெரிவித்து பேரணி நடைபெற்றது. அந்தப் பேரணியில் பா.ஜ.க-வை சேர்ந்த வனத்துறை அமைச்சர் சவுத்ரி லகால் சிங், வர்த்தகத்துறை அமைச்சர் சந்தர் பிரகாஷ் சிங் ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் அவர்கள் இருவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

உமர் அப்துல்லா

துணை முதல்வராக இருந்த பா.ஜ.க-வைச் சேர்ந்த நிர்மல் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார். புதிய துணை முதல்வராக கவிந்தர் குப்தாவை பா.ஜ.க அறிவித்தது. அவர் நேற்று பதவியேற்றார். பதவியேற்பு விழாவில் அவர் பேசும்போது, ''கத்வாவில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் ஒரு சிறிய சம்பவம். இதை நாடு முழுவதும் பேசக்கூடிய அளவிற்கு பெரிதாக்கி இருக்கக் கூடாது. மாநில அரசின் முன் நிறைய சவால்கள் இருக்கின்றன. இந்த விஷயத்தை திரும்பத் திரும்பப் பேசுவது தேவையில்லாத ஒன்று’’ என்று கூறினார். 

அவரது பேச்சுக்கு எதிர்க்கட்சிகள், இயக்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்தன. காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, கவிந்தர் குப்தா தெரிவித்த கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், ''கத்துவா சம்பவம் தொடர்பாக ஜம்மு-காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி மற்றும் அவரது அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் துணை முதல்வர் கவிந்தர் குப்தாவிடம் இருந்து வேறு என்ன நீதியை எதிர்பார்க்க முடியும்?’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!